உலகின் உயரமான நடராஜர் சிலை: சென்னையில் இருந்து நாளை சுவிஸ் பயணம்
சென்னை:
இரண்டு டன் எடையும், 11 அடி உயரமும் கொண்ட, உலகிலேயே மிகப் பெரிய பஞ்சலோக நடராஜர் சிலைநாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் சுவிட்ஸர்லாந்து நாட்டுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
அந் நாட்டின் ஜெனிவா நகரில் உள்ள அணுசக்தி நிலையத்தில் இந்தச் சிலை வைக்கப்படும். சுவிஸ் நாட்டின்கோரிக்கையை ஏற்று இந்திய அணுசக்தி கழகம் இந்தச் சிலையை வழங்குகிறது.
இந்தச் சிலை கும்பகோணம் தாலுகா சுவாமிமலைக்கு அருகே உள்ள திம்மக்குடியில் உருவாக்கப்பட்டது.பஞ்சலோக சிலைகளை உருவாக்குவதில் இந்தக் கிராம சிற்பிகள் பெயர் பெற்றவர்களாவர்.
கடந்த 6 மாதங்களாக 24 சிற்பிகள் இரவும், பகலுமாக உழைத்து, உலகின் உயரமான நடராஜர் சிலையைவடிவமைத்தனர்.
ரூ.15 லட்சம் செலவில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகளுக்கு உட்பட்ட இந்தச் சிலைக்கு உரியபூஜைகள் செய்யப்பட்டன.
இப்போது சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டு வரும் இந்தச் சிலை நாளை விமானம் மூலம் ஜெனிவாஅனுப்பப்படும்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications