பண்ணையார் சாவு: தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
டெல்லி:
சென்னையில் வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்என்று முன்னாள்மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் நாடார் சமுதாயப் பிரமுகர்கள், தேசியமனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைவராக இருந்து வந்த பண்ணையார், சென்னையில் போலீஸாரால்என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடார் சமுதாயத்தினர் மத்தியில் பெரும்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்றுஅவர்கள் கோரி வருகிறார்கள். இந் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில்நாடார் பிரமுகர்கள் டெல்லிக்குச் சென்று அங்கு தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி ஆனந்த்தைசந்தித்து மனு கொடுத்தனர்.
அதில், வேண்டும் என்றே பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது சாவு குறித்து முழுமையான,நேர்மையான விசாரணையை மத்திய புலனாய்வுத் துறை மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தனர்.இது தொடர்பாக உரிய முடிவை அறிவிப்பதாக நீதிபதி ஆனந்த் தெரிவித்ததாக தனுஷ்கோடி ஆதித்தன் பின்னர்செய்தியாளர்களிடம் கூறினார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications