ஜனனியின் ஜாமீன் மனு: டிசம்பர் 4ல் இறுதி விசாரணை
சென்னை:
கஞ்சா வழக்கில் கைதான நடராஜனின் தோழி, ஜனனியின் ஜாமீன் மனு மீதான இறுதிக் கட்ட விசாரணை டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜனனியின் ஜாமீன் மனுவை நீதிபதி கற்பக விநாயகம் விசாரித்து வந்தார். ஆனால் அவர் விசாரிக்கக் கூடாது என அதிமுக தரப்பில் மனு தாக்கலானது.
இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியால் தான் இந்த வழக்கு அரசியலாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய நீதிபதி, இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகிக் கொண்டார்.
இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி சொக்கலிங்கத்திடம் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி வழங்கினார்.
இன்று இந்த வழக்கை நீதிபதி சொக்கலிங்கம் விசாரித்தார். அப்போது ஜனனியின் சார்பில் ஆஜராகி இருக்க வேண்டிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் சிபல் வரவில்லை.
உச்ச நீதிமன்ற வழக்கில் அவர் ஆஜராக வேண்டியிருந்ததால் இன்று வர முடியவில்லை என்று கபில் சிபலின் ஜூனியர் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்கு நீதிபதி சொக்கலிங்கம் தள்ளிவைத்தார்.
அதுவரை ஜனனி. மயிலாப்பூர் அரசினர் பெண்கள் காப்பகத்திலேயே தங்க வைக்குமாறும் அவர் உத்தரவிட்டார். ஜனனியை சிறையில் இருந்து இந்தக் காப்பகத்தில் தங்க வைக்க முதலில் உத்தரவிட்டவர் நீதிபதி கற்பக விநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications