ஜெயலலிதா- சந்திரபாபு நாயுடு சந்திப்பு
சென்னை:
கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு நீர் வழங்குவது தொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இப்போது ஜெயலலிதா ஹைதராபாத்தில் உள்ள தனது திராட்சைத் தோட்டத்தில் சசிகலாவுடன் ஓய்வெடுத்து வருகிறார்.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு போக ஆரம்பித்துள்ளன. இப்போது சென்னை ஏரிகளில் உள்ள நீரைக் கொண்டு நகருக்கு அடுத்த மாத பிற்பகுதி வரைதான் குடிநீரை வினியோகிக்க முடியும். இதனால் சென்னை நகரில் வரலாறு காணாத வறட்சி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே கண்டலேறு அணையிலிருந்து 3 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நாயுடுவுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக நேரிலும் நாயுடுவைச் சந்தித்து வலியுறுத்த உள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது உடன் இருப்பதற்காக தமிழகத் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்றே ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
மாலை 3 மணிக்கு நாயுடுவை ஜெயலலிதா சந்தித்துப் பேசுகிறார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் அதிகாரிகள் சென்னை திரும்பி விடுவர். ஜெயலலலிதா, தனது தோழி சசிகலாவுடன் தொடர்ந்து தனது திராட்சைத் தோட்ட பங்களாவில் தங்கியிருப்பார்.
டான்சி தீர்ப்பு வெளியானவுடன் ஹைதராபாத் சென்ற ஜெயலலிதா இன்று நாயுடுவை சந்திக்கிறார்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications