மாலத் தீவு சிறையில் தமிழக வாலிபர் அடித்துக் கொலை: மரணத்தின் பிடியில் மேலும் 2 தமிழர்கள்
திண்டுக்கல்:
கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு தமிழர்கள் மரணதண்டனையை எதிர் நோக்கி மாலத்தீவுகள் சிறைச் சாலையில் அடைபட்டுள்ளனர். மேலும் ஒரு வாலிபர் சிறையிலேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
மாலத் தீவுகளுக்கு வேலைக்காக தஞ்சாவூரைச் சேர்ந்த கமல், திருச்சியைச் சேர்ந்த சரவணன், கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜன் ஆகியோர் சென்றனர். அங்கு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.
இந் நிலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே ஒரு பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, போலீஸார் இந்த மூவரையும் கைது செய்தனர். பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்ததாக இவர்கள் மேல் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சரவணனிடம் ஒப்புதல் வாக்குமூலம் கேட்டு அந் நாட்டு சிறை அதிகாரிகள் கடுமையாகத் தாக்கினர். இதில் சிறைச் சாலையிலேயே அவர் இறந்தார்.
இந் நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ராஜனின் தாயார் தன் மகனை காப்பாற்றக் கோரி திண்டுக்கல்லில் உள்ள அமைதிக் குழு என்ற அமைப்பின் தலைவர் பால் பாஸ்கர் என்பவரை அணுகினார். இதன் பின் பிரதமர் வாஜ்பாய், முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.
இது குறித்து பால் பாஸ்கர் கூறுகையில், குற்றம் தொடர்பாக தமிழர்களிடம் பாரான்ஸிக் சோதனை எதுவும் நடத்தப்படவில்லை. நிரபாரதிகள் என்பதை நிரூபிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமலேயே, அவர்களை அடித்துத் துன்புறுத்தி, குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்துள்ளனர்.
இப்போது நாங்கள் மாலத்தீவுகளில் ஒரு சட்ட அமைப்பு மூலமாக இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
போதை மருந்து கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மலேசியாவில் 8 தமிழர்கள் சிறையில் வாடுவதும், இவர்கள் அனைவரையும் காப்பாற்றிக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாஜ்பாயிக்கு கடிதம் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications