தஞ்சை, புதுவையில் கன மழை: சம்பா நெல் விவசாயிகள் கொண்டாட்டம்
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மற்றும் பாண்டிச்சேரியில் மிக கனத்த மழை பெய்துள்ளது.
இதனால் காவிரி நீர் வராவிட்டாலும் சம்பா பயிரைக் காப்பாற்றிவிட முடியும் என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள் பூரித்துப் போயுள்ளது.
மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரை வைத்து சம்பா பயிரை நட்டுவிட்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகளின் வயிற்றில் இந்த மழை பாலை வார்த்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தாலும் தஞ்சாவூரிலும் பாண்டிச்சேரியிலும் தான் மிக, மிக பலத்த மழை பெய்தது. நேற்றிரவு ஆரம்பித்த மழை இன்றும் தொடர்ந்து வருகிறது.
தஞ்சையில் சுமார் 60,000 ஹெக்டேரில் சம்பா நெல் பயிரிடப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. இதில் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. இதுவரை உயிரிழப்புக்கள் குறித்து தகவல் ஏதும் இல்லை.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ரங்கசாமி இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
மற்ற பகுதிகளில் மழை விவரம்:
நீடாமங்கலம்- 136 மி.மீ
கும்பகோணம்- 110 மி.மீ
குடவாசல்- 90 மி.மீ
நாகப்பட்டிணம்- 76 மி.மீ
பாபநாசம்- 71 மி.மீ
புதுக்கோட்டை- 66 மி.மீ
நன்னிலம்- 74 மி.மீ
திருவாரூர்- 56 மி.மீ
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications