ஜெ. வழக்கு: சிறப்பு நீதிமன்றம் குறித்து கர்நாடக அரசு நாளை முடிவு
பெங்களூர்:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பதுதொடர்பாக கர்நாடக சட்டத் துறை தனது சிபாரிசை அம் மாநில அரசிடம் வழங்கியுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுவிட்டது.ஆனால் சிறப்பு நீதி மன்றத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பாக கர்நாடக அரசு இன்னும் குழப்பத்திலேயேஉள்ளது. இதனால் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கர்நாடக அரசு இதுவரை எந்த பரிந்துரையும்செய்யவில்லை.
கர்நாடக அரசின் பரிந்துரைக்கடிதம் கிடைத்த பின்னரே வர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியை நியமிப்பார் என உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் சிறப்பு நீதிமன்றத்தை பெங்களூரைத் தவிர்த்து வேறு ஏதாவது கர்நாடக நகருக்கு மாற்றலாமாஎன்பது குறித்து அரசு யோசித்து வருகிறது. பெங்களூர் தமிழக எல்லையில் இருப்பதால் வழக்கு விசாரணையின்போது அதிக அளவில் அதிமுகவினர் வரக்கூடும்.
வீரப்பன், காவிரி விவகாரங்களால் இரு மாநில உறவுகளும் எப்போதுமே ஒருவிதமான பதற்றத்தில் உள்ளநிலையில் இதை கர்நாடக முதல்வர் கிருஷ்ணா விரும்பவில்லை.
எனவே சிறப்பு நீதிமன்றத்தை குல்பர்கா, மைசூர், மங்களூர், கர்வார் ஆகிய நகரங்களில் ஏதாவது ஒன்றிற்குமாற்றவது குறித்து உச்ச நீதிமன்றத்திடம் கோரலமா என்று கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது.
இது தொடர்பாக கர்நாடக சட்டத் துறையின் ஆலோசனையை அரசு கேட்டிருந்தது. இதையடுத்து சட்டத் துறைஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அட்வகேட் ஜெனரல் ஜெயராம் தனது பரிந்துரையை அரசிடம் இருநாட்களுக்கு முன் சமர்ப்பித்துவிட்டதாகத் தெரிகிறது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை ஆராய்ந்து, வரும் வியாழனன்று நடைபெறவிருக்கும் கர்நாடகஅமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications