டிசம்பர் 15: வன்முறையின்றி சிறைகளை நிரப்ப திமுகவுக்கு கருணாநிதி உத்தரவு
சென்னை:
பொடா சட்டத்தைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி சிறைநிரப்பும் போராட்டத்தை திமுக நடத்த உள்ளது.
இது தொடர்பாக அண்ணா அறிவாலயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் முன்பாக மாவட்ட, தாலுகா தலைநகரங்களில் சிறை நிரப்பும் போராட்டம்டிசம்பர் 15ல் நடைபெறும்.
மதுரையில் ஸ்டாலின், தென் சென்னையில் கட்சியின் பொருளாளர் ஆற்காடு வீராசாமி, நெல்லையில் துணைப்பொதுச் செயலாளர் பரிதி இளம்வழுதி, கோவையில் தலைமைக் கழக முதன்மைச் செயலர் துரைமுருகன் ஆகியோர்தலைமை வகிப்பர்.
தஞ்சையில் கோ.சி.மணி, சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், திருச்சியில் கே.என்.நேரு, விழுப்புரத்தில் பொன்முஐ,விருதுநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்,ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறை கூடாது: கருணாநிதி
இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தப் போராட்டத்தில் வன்முறை கூடாது. அரசு அலுவலகங்கள் முன்பு மட்டுமே மறியல் நடத்தப்பட வேண்டும்.பொது மக்களுக்கு இடைஞ்சல் நேரும் வகையில் ரயில், பேருந்து முன்பு நடத்தக்கூடாது.
காவல் துறையினரோ அல்லது அவர்களது துணையுடன் ஆளும் கட்சியினரோ பிரச்சனையை ஏற்படுத்தி நமக்குஅவப்பெயர் தேடித் தர முனைந்தாலும், அப்போதும் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தப் போராட்டம் பொடாவை வைத்து பா.ஜ.கவுடனான உறவை துண்டித்துக் கொள்ள திமுக எடுக்கும் முதல்படியாகக் கருதப்படுகிறது.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications