சென்னையில் ரூ. 19 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: கேரள வாலிபர் கைது
சென்னை:
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ரூ. 19 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளாவைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோயம்பேடு வெளியூர்ப் பேருந்து நிலையத்திற்கு அருகே ஆம்னி பேருந்து நிலையம் உள்ளது. இங்கு போலீஸார்இன்று தீவிர கண்காணிப்புப் பணியில் இருந்தபோது இரு நபர்களின் நடமாட்டத்தில் வித்தியாசம் இருந்ததைக்கண்டனர்.
அவர்களைப் போலீஸார் நெருங்கியபோது, ஒருவர் ஓடி விட்டார். போலீஸாரின் பிடியில் இன்னொருவர் மட்டுமேசிக்கினார். அவர் வைத்திருந்த சூட்கேஸ்களை சோதனை செய்து பார்த்தபோது அதில் ரூ. 19 லட்சம் பணம்இருந்தது.
இதற்கு கணக்கோ, உரிய ஆவணங்களோ இல்லை. முன்னுக்குப் பின் முரணாக அந்த நபர் பதில் தந்தார்.இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரது பெயர் கபூர் என்று தெரியவந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த கபூர், பூக்கடை பகுதியில் உள்ள நஸீர்என்பவடமிருந்து இந்தப் பணத்தைப் பெற்று கேரளாவுக்கு கடத்தியதாக போலீஸாரிடம் தெரிவித்தார்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications