தற்காலிக அரசு ஊழியர்கள் மது கடைகளுக்கு டிரான்ஸ்பர்!
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 4 மாதமாக வேலை பார்த்து வந்த தற்காலிக அரசு ஊழியர்கள், தற்போதுஅரசு மதுக் கடைகளில் மேற்பார்வையாளர்களாக வேலை பார்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதிலும் தற்காலிகஅரசு ஊழியர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர்.
தலைமைச் செயலகத்தில் மட்டும் 2,000 பேர் வரை நியமிக்கப்பட்டனர். இந் நிலையில் இவர்களில் 506 பேருக்குநேற்று அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அனைவரும், இன்று காலை பெசன்ட் நகர் சமுக நலக்கூடத்தில் ஆஜராகுமாறு கூறப்பட்டது.
இதையடுத்து என்ன, ஏது என்று புரியாமல் அனைவரும் இன்று காலை பெசன்ட் நகர் வந்து சேர்ந்ததனர்.அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் அனைவரும் டாஸ்மாக் நிறுவனம் முலம் அரசுநடத்தி வரும் மதுக் கடைகளில் மேற்பார்வையாளர்களாக பணியாற்ற நியமிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.
எம்.ஏ. வரை படித்த பட்டதாரிகளான தங்களை இப்படி மதுக் கடைகளில் வேலை பார்க்குமாறு அரசு கூறும் என்றுதாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கண்களில் நீர் தழும்பாத குறையாக அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.
தலைமைச் செயலக ஊழியர்கள் என்று இத்தனை நாட்களாக பெருமையுடன் கூறிக் கொண்டிருந்த தாங்கள்இனிமேல் நாங்கள் பார்க்கும் வேலையை வெளியில் சொல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.
506 பேரும் சென்னையில் உள்ள மதுக் கடைகளில் பணியாற்ற வேண்டும் என்றும், எந்தக் கடை என்பது இன்றுமாலைக்குள் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மதுக் கடைகளில் மேற்பார்வையில் வேலைக்குச் சேர ரூ. 50,000 டொசிட் கட்ட வேண்டும் என்பதால் அதற்குஇளைஞர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை. இந் நிலையில் தாற்காலிக ஊழியர்களை மதுக் கடைகளுக்குதிருப்பிவிட்டுள்ளது தமிழக அரசு.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications