ஜீவஜோதி வழக்கு: ஜோதிடர் சாட்சியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னையைச் சேர்ந்த ஜோதிடர்இன்று சாட்சியம் அளித்தார்.

பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணை பூந்தமல்லியில் உள்ள கூடுதல் அமர்வுநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் இதுவரை ஜீவஜோதி, அவரது தாயார் தவமணி உள்ளிட்டோர் சாட்சியம்அளித்துள்ளனர். அவர்களிடம் குறுக்கு விசாரணையும் முடிந்துள்ளது.

இந் நிலையில் இன்று மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜோதிடர் ரவி என்பவர் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர்கூறுகையில், ஜோதிடம் பார்ப்பதும், ஜாதகம் பார்ததுச் சொல்வதும் எனது பொழுது போக்கு.

ஹோட்டல் அதிபர் ராஜகோபாலை எனக்கு கடந்த 10 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். புதிதாக எங்கு ஹோட்டல்கிளை ஆரம்பித்தாலும் என்னிடம் நல்ல நேரம் குறித்துக் கொண்ட பின்புதான் ஆரம்பிப்பார்.

கடந்த 2001ம் ஆண்டு ராஜகோபால் அனுப்பி வைத்ததாக ஜீவஜோதி, அவரது தாயார் தவமணி, தந்தை மற்றும்சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் மேலாளர் பெருமாள் உள்ளிட்டவர்கள் என் வீட்டுக்கு வந்துசாந்தகுமாரைக் காணவில்லை என்று சொல்லி ஜோதிடம் பார்த்தனர்.

அப்போது சாந்தகுமாருக்கு மன நிலை சரியில்லை என்றும் என்றும் 3 வருடங்களுக்குப் பிறகுதான் நல்ல நேரம்தொடங்குகிறது. எனவே இப்போதைக்கு அவர் திரும்ப வர மாட்டார் என்றும் தெரிவித்தேன் என்றார் ரவி.

இதனையடுத்து ராஜகோபால் தரப்பு வழக்கறிஞர் ரவியை குறுக்கு விசாரணை செய்தார். பெருமாள் உள்ளிட்டயாரும் உங்களிடம் ஜோதிடம் பார்க்க வரவில்லை. போலீஸாரின் மிரட்டலுக்குப் பயந்து நீங்கள் பொய் சாட்சியம்கூறுகிறீர்கள் என்று அவர் கூறியதை ரவி மறுத்தார்.

இதனையடுத்து வழக்குத் தொடர்பாக சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப போலீஸார் முறையாக ஒத்துழைக்கவில்லைஎன்று கண்டனம் தெரிவித்த நீதிபதி, வழக்கை நாளை மறு நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+