மாலத்தீவுகள் சிறையில் தமிழக வாலிபர்களுடன் இந்திய அதிகாரிகள் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொய்யான கற்பழிப்பு- கொலை வழக்கில் கைதாகி மாலத்தீவுகள் சிறையில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் இரு தமிழக வாலிபர்களின் வழக்கு செலவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

இது குறித்து ஹைதராபாத்தில் இருந்து முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

ராஜன், கமல்ஹாசன் ஆகிய இந்த வாலிபர்கள் பொய் வழக்கில் மாலத்தீவு சிறையில் உள்ளதை சுட்டிக் காட்டி பிரதமருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் கடிதம் எழுதியிருந்தேன். மேலும் ஒரு வாலிபரான சரவணன் சிறையிலேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த இரு வாலிபர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தேன். இதற்கு அமைச்சர் சின்ஹாவிடம் இருந்து விரிவான பதில் கடிதம் வந்துள்ளது. அதில் இவர்களைக் காக்க மத்திய அரசு முயற்சிகள் எடுத்துள்ளதாக சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறையில் கொல்லப்பட்ட சரவணனின் உடலை இந்திய அதிகாரிகள் அப்போதே சென்று பார்வையிட்டதாகவும், அப்போது அவரது கழுத்தில் சில தழும்புகள் இருந்ததை அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாகவும் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராஜனையும் கமல்ஹாசனையும் இந்திய அதிகாரிகள் சிறையில் சென்று சந்தித்தாகவும், அப்போது தங்கள் தரப்பு வாதத்தை போலீசார் பதிவு செய்யவே இல்லை என்றும் அவர்கள் கூறியதாக சின்ஹா எனக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

இதைத் தவிர விசாரணையை முழுக்க முழுக்க மாலத்தீவுகள் மொழியில் நடத்தி முடித்து தண்டனையை போலீசார் வாங்கித் தந்துள்ளனர். இதில் தமிழக மாணவர்களின் வாதமே பதிவு செய்யப்படவில்லை எனவும் சின்ஹா கூறியுள்ளார்.

இந்த விளக்கத்தைத் தந்தசின்ஹாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற இரு வாலிபர்களுக்கும் தொடர்ந்து சட்டரீதியிலான உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதற்காக மாலத்தீவில் ஆகும் வழக்கு செலவுகளை மத்திய அரசே ஏற்க வேண்டும்.

தேவைப்பட்டால் இந்தச் செலவை மத்திய அரசோடு சேர்த்து மாநில அரசும் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

மாலத்தீவில் 16 வயதான பெண்ணை இந்த மூன்று வாலிபர்களும் சேர்ந்து கற்பழித்துக் கொலை செய்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி வழக்குப் பகிவானது. இதில் சரவணனை சிறை அதிகரிகள் கடந்த ஏப்ரல் 10ம் தேதி அடித்துக் கொன்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+