சோனியா, ஜோகி மீது சிபிஐ விசாரணை நடத்த சு.சுவாமி கோரிக்கை
சென்னை:
சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள பா.ஜ.க எம்.எல்.ஏக்களை பணம் கொடுத்து வாங்கி, அங்குகாங்கிரஸ் ஆதரவு ஆட்சியை அமைக்க முயன்ற முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகி மற்றும் சோனியா காந்தி மீதுசி.பி.ஐ உடனடியாக வழக்குத் தொடர வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிகோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பதவி விலகிச் செல்லும் ஒரு முதல்வரே, கட்சித் தாவலுக்குவகை செய்யும் விதத்தில் பணம் கொடுத்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயன்றுள்ளது இந்தியாவில்இதுவரை நடைபெற்றிராத ஒன்று.
இதற்குக் காரணமான அஜீத் ஜோகி, அவரது கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மீது சிபிஐ விசாரணைக்குஉத்தரவிடப்பட வேண்டும். இல்லாவிட்டால் இதற்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் நான் வழக்குத்தொடர நேரிடும் என்று கூறியுள்ளார் சுவாமி.
இந் நிலையில் காங்கிரஸ் தலைமைக்கே தெரியாமல் இந்த அரசியல் பேரத்தில் ஈடுபட்ட அஜீத் ஜோகியை கட்சியைவிட்டு நீக்கியுள்ளார் சோனியா காந்தி. நேற்று நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்திலும் ஜோகியைஅனுமதிக்க மறுத்துவிட்ட சோனியா, அவரைச் சந்திக்கவும் மறுத்துவிட்டார்.
சட்டீஸ்கரில் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. தலைவர் ஜூதேவை கையில் ரம் மற்றும் இன்னொரு கையில் லஞ்சப்பணத்துடன் வீடியோ எடுத்து மாட்ட வைத்தார் ஜோகி. அதே ஜோகியை பா.ஜ.கவினர் ஆடியோ கேசட் மூலம்மாட்டி விட்டுள்ளனர்.
பா.ஜ.கவை உடைக்க அக் கட்சி எம்.எல்.ஏக்கள் இருவருடன் அஜீத் ஜோகி நடத்திய உரையாடல் கேசட்டில் பதிவுசெய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆடியோ திட்டமிட்டே பதிவு செய்யப்பட்டதாகவும், துணைப் பிரதமர் அத்வானிக்கும், சட்ட அமைச்சர்ஜேட்லிக்கும் இது முன் கூட்டியே தெரியும் என்றும் சட்டீஸ்கர் மாநில பா.ஜ.க. தலைவர் காஷ்யப் கூறியுள்ளார்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications