பொடா: போராட்டத்துக்கு முன் திமுகவினரை கைது செய்ய தடை கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் மாநில அரசைக் கண்டித்தும் வரும் 15ம் தேதி திமுக நடத்தவிருக்கும்போராட்டத்தை ஒடுக்க முன்கூட்டியே திமுகவினரைக் கைது செய்ய போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து போராட்டத்திற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுகவினரைக் கைது செய்யத் தடைவிதிக்கக் கோரி, அக் கட்சியின் பொருளாளர் ஆற்காடு வீராசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

விழுப்புரம் திமுக மாநாட்டில் மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்குக் கண்டணம்தெரிவிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

திமுக இதுவரை நடத்திய போராட்டங்கள் வன்முறைக்கு இடமில்லாமல் அமைதியாக நடந்துள்ளன. இம் முறையும்அதேபோல் அமைதியாக போராட்டம் நடைபெற வேண்டும் என்று கட்சித் தலைவர் கருணாநிதி தொண்டர்களைக்கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் திமுகவினரின் அரசியல் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், திமுக முன்னாள் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்களைப் பழிவாங்கும் நோக்கிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் அவர்களைக் கைதுசெய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.

ஆளுங்கட்சியைத் திருப்திபடுத்துவதற்காக போலீஸாரும் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடும்என்ற அச்சம் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. திமுகவினரின் அடிப்படை உரிமைகளில் தலையிடவோ,தடுக்கவோ போலீஸாருக்கு சட்ட உரிமைகள் இல்லை.

மக்களிடம் கருத்து உருவாக்கும் வகையில் பொது இடத்தில் ஆயுதம் இன்றி கூடுவதற்கு ஜனநாயக அமைப்பில்உரிமை உள்ளது. எனவே திமுகவினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்ய இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் போராட்டத்திற்கு நடைபெறும் முன்பு யாரும் கைது ஆகக் கூடாது என்று கட்சியினருக்கு திமுகதலைமைக் கழகம் ரகசிய உத்தரவு அனுப்பியுள்ளது. அத்தோடு பாஜகவை விமர்சித்து யாரும் கடுமையாகப் பேசவேண்டாம் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக அறிவுறுத்தியுள்ளது.

வட மாநிலங்களில் கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றிக்குப் பின், அக் கட்சியுடனானதிமுகவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணியைத் தொடர்வதில் ஆர்வம் காட்டிவருகிறது. பாஜகவும் திமுகவுடனான கூட்டணியை வலுப்படுத்த முயல்கிறது.

ஒசூரில் வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள பாஜக செயற்குழுக் கூட்டத்தில் திமுகவுடனான உறவை பலப்படுத்தும்வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

அன்பழகன் பிறந்தநாள் விழா ரத்து:

மத்திய அமைச்சர் மாறன் மறைந்த கடுமையான துயரத்தில் இருந்து மீளாத நிலையில், தனது 82வது பிறந்த நாளை(டிசம்பர் 19) கட்சியினர் யாரும் கொண்டாட வேண்டாம் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கைவெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+