ரஷ்ய நிறுவனத்திடம் லஞ்ச பேரம்: வீடியோவில் சிக்கிய தமிழக அதிகாரிகள்
சென்னை
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு அனுமதி அளிக்க தமிழக அரசு அதிகாரிகள் ரஷ்யத் தூதரகத்தில் லஞ்சப்பேரம் நடத்தியது வீடியோவில் பதிவு செய்யப்பட்டதுள்ளதாகவும், தகுந்த நேரத்தில் அந்த வீடியோ டேப்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
ரூ.1,750 கோடி செலவில் மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது. இதற்கு உலக அளவிலான டெண்டர் கோரியது தமிழக அரசு. இதையடுத்து ரஷ்யாவைச் சேர்ந்தகிரன்சிவ் விண்வெளிஆய்வு மற்றும் உற்பத்தி மையம் என்ற நிறுவனம் மற்றும் இன்னொரு வெளி நாட்டுநிறுவனமும் விண்ணப்பித்தன.
ரஷ்ய நிறுவனத்தின் டெண்டரை முதலில் ஏற்ற அரசு பின்னர் நிராகரித்தது. இதையடுத்து தனது இந்தியப்பிரதிநிதியின் மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ரஷ்ய நிறுவனம். இந்த வழக்கில் ரஷ்யநிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் சுப்ரமணியன் திருவிக்கிரமன் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில்,
கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி, சென்னை பெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீரகற்றல் வாரியத்தின் நிர்வாகஇயக்குநர் லஞ்சம் கேட்பதாக, நிர்வாக இயக்குநர் அலுவலகத்திலிருந்து வந்த ஒருவர் கேட்டார். அவரதுகோரிக்கையை நாங்கள் ஏற்கவில்லை.
இதையடுத்து சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு சென்ற அந்த நபர் அங்கும் இதே கோரிக்கையைவைத்தார். அங்கும் லஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபர். மாஸ்கோவுக்கு பலமுறைபோன் செய்து லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று கூறினார்.
பேசுவதற்கு உபயோகப்படுத்திய தொலைபேசி எண்ணும், அவரது உரையாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோவுக்கும் நாங்கள் பல்வேறு பணிகளை செய்துகொடுத்திருக்கிறோம். நாங்கள் கடந்த 87 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருந்து வருகிறோம். உலகின் முன்னணிநிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறோம்.
எங்களது கையில் உள்ள ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ. 2,50,000 கோடியாகும். ஆனால் தமிழக அரசின் இந்தமலிவான, ஊழல் மிகுந்த ஒப்பந்தத்தை நாங்கள் விரும்பவில்லை என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
மேலும் இது தொடர்பாக நடந்த தொலைபேசி உரையாடல்களின் டேப்பையும் ரஷ்ய நிறுவனம் நீதிமன்றத்தில்தாக்கல் செய்துள்ளது. இந்த டேப் தவிர முக்கியமான வீடியோ ஆதாரமும் ரஷ்ய நிறுவனத்திடம் உள்ளதாகக்கூறப்படுகிறது.
முன்னதாக ரஷ்ய நிறுவனத்துக்கு டெண்டர் பெற்றுத் தர சென்னையில் உள்ள ரஷ்யத் தூதரகம் தலையிட்டது.இதையடுத்து தமிழக அரசின் சார்பில் மூத்த அதிகாரிகள் ரஷ்ய தூதரகத்துக்கே சென்று ரூ. 50 கோடி லஞ்சம்கேட்டுள்ளனர்.
பாதுகாப்பு கருதி ரஷ்ய தூதரகத்திற்கு வருபவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க குளோஸ்ட் சர்க்யூட்கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கேமராவில் குடிநீர் வாரிய அதிகாரிகள் லஞ்ச பேரம் பேசியதுமுழுவதும் பதிவாகியுள்ளது.
உரிய நேரத்தில் இந்த வீடியோ டேப்பை ரஷ்ய நிறுவனம் வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறுவீடியோ ஆதாரம் வெளியாகும்பட்சத்தில் தமிழக அரசு அதிகாரிகளின் முகத்திரை கிழியலாம்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications