8 அடி குழியில் பதுங்கியிருந்த சதாம் ஹூசேன்: ஒத்துழைக்க மறுக்கிறார்
பாக்தாத்:
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்தில் அமெரிக்கா படையினரால் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளுக்கு அவர் பதில் சொல்ல மறுத்து வருவதாகஅமெரிக்கா தெரிவித்துள்ளது.
அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக அமெரிக்கப்படைகள் தெரிவித்துள்ளன.
தாடி, அழுக்கு உடைகளுடன் இருந்த அவரை மரபணு சோதனை மூலம் சதாம் உசேன்தான் என்பதைஉறுதிப்படுத்தினர். அவர் இப்போது பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி பால்பிரெமர் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு அவர் மீதான குற்றங்கள் குறித்து ஜெனீவா ஒப்பந்தப்படி, சர்வதேசபோர்க் குற்ற விதிமுறைகளின் கீழ் வழக்கு நடைபெறும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட்ரம்ஸ்பீல்ட் கூறியுள்ளார்.
இதற்கிடையே பிடிபட்ட சதாமை இப்போது பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அமெரிக்கப்படைகள் விசாரித்து வருகின்றன.
விசாரணைகளுக்கு அவர் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமெரிக்காவின் டைம்ஸ் வார இதழ்கூறியுள்ளது. விரைவில் வெளிவர உள்ள அந்த இதழில் சதாமுடன் விசாரணை நடத்தும் அதிகாரிகளின் பேட்டிஇடம் பெறவுள்ளது.
இது குறித்து டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
பெரும்பாலான கேள்விகளுக்கு சதாம் நேரடியாக பதில் தரவில்லை. தங்களிடம் அணு ஆயுதங்களே இல்லைஎன்று கூறிவிட்ட சதாம், ஆயுதம் இருப்பதாக அமெரிக்கா தானாகவே கனவு கண்டு கொண்டு தாக்கியதாகக்கூறியுள்ளார்.
பிடிபட்டதால் வருத்தமா என்ற கேள்விக்கு, என் மக்கள் உங்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதால்வருத்தப்படுகிறேன் என்று பதில் தந்திருக்கிறார்.
அதே போல குடிக்கத் தண்ணீர் கொடுத்தபோது, இதைக் குடித்தால் நான் பாத்ரூம் செல்ல வேண்டும். என் மக்கள்உங்களிடம் அடிமையாகக் கிடக்கும்போது நான் உங்கள் பாத்ரூமை பயன்படுத்த வேண்டியிருக்கிறதே எனசம்மந்தம் இல்லாமல் பதில் தந்துள்ளார்.
பல நேரங்களில் கேள்விகளுக்கு தொடர்பில்லாத பதில்களையே தந்து வருகிறார்.
என் தனிமையை, அதிபரின் தனிப்பட்ட உரிமைகளில் தலையிடுவதை நான் விரும்பவில்லை. இதனால் தான்ஐ.நா. அணு ஆயுத பார்வையாளர்களை நான் என் நாட்டுக்குள் அனுமதிக்க முதலில் மறுத்தேன் என்றும்கூறியுள்ளார் சதாம்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications