நீதிமன்ற அனுமதி மறுப்பால் டெல்லி செல்லாத வைகோ
சென்னை:
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் பொடா மறு ஆய்வு சட்ட மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொள்ளமதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து நேற்று இரவு சென்னைஉயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும், பொடா மறு ஆய்வுக் குழுவுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க வகைசெய்யும் சட்ட மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொள்ள வைகோவுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகுலசேகரன் நேற்று மாலை அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இன்று காலை சென்னையிலிருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்டு மக்களவை சபாநாயகர் அலுவலகத்தில்வைகோ ஒப்படைக்கப்பட வேண்டும். பொடா விவாதத்தில் கலந்து கொண்டு வைகோ பேசலாம், ஓட்டுப்போடலாம். தனது வழக்கு குறித்து அவர் எதுவும் பேசக் கூடாது. பின்னர் மாலையில் மீண்டும் அவர் சென்னைக்குஅழைத்து வரப்பட வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
நீதிபதி குலசேகரனின் உத்தரவை எதிர்த்து அரசு தலைமை வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன் நேற்று இரவு மூத்தநீதிபதி சிர்புர்கன் இல்லத்தில் அவரை சந்தித்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தார்.இதையடுத்து நீதிபதி சிர்புர்கர் மற்றும் நீதிபதி கண்ணதாசன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த மனுவைபரிசீலித்து விசாரித்தது. இரவு 9.45 மணிக்கு விசாரணை தொடங்கியது. இரவு 11 மணியளவில் தீர்ப்புஅளிக்கப்பட்டது.
இறுதியில், நீதிபதி குலசேகரன் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்து டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. பொடாசட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்தோ அல்லது ஜாமீன் கோரியோ இதுவரை மனு செய்ததில்லை.
ஜாமீன் கோராத ஒருவர், எம்.பி. என்ற ஒரே காரணத்திற்காக நாடாளுமன்றம் செல்ல அனுமதி கேட்க முடியாது.உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக ஏற்கனவே ஒரு தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. எனவே வைகோ டெல்லிசெல்ல தனி நீதிபதி கொடுத்த அனுமதியை டிவிஷன் பெஞ்ச் நிராகரிக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த தீர்ப்பையடுத்து வைகோ டெல்லி செல்வது தடைபட்டு விட்டது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications