நக்கீரன் கோபால் ஜாமீனில் விடுதலை: உயர் நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் நக்கீரன் ஆசிரியர் கோபாலை ஜாமீனில் விடுதலை செய்யசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோபாலின் சிறைக் காவலை நீடித்த பொடா நீதிமன்ற நீதிபதியின்செயலையும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறை கூறியுள்ளனர்.

அவர் கைதாகி இன்றோடு 252 நாட்களாகின்றன. இந் நிலையில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்ய மனுவைவிசாரித்த உயர் நீதிமன்றம் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க இன்று உத்தரவு பிறப்பித்தது.

முன்பே சென்னை உயர் நீதிமன்றம் கோபாலுக்கு ஜாமீன் வழங்கியது. அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து அந்த ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது.

இந் நிலையில் கோபாலின் சகோதரர் குருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார்.அந்த ஹேபியஸ் கார்பஸ் மனுவில், கோபால் மீதான குற்றச்சாட்டுகளை சிபிசிஐடி போலீசார் சரியான முறையில்பதிவு செய்யவில்லை, அந்தக் குற்றசாட்டுகளை சரியாக விளக்கவும் இல்லை, கோபாலைக் கைது செய்தபோதுஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி சண்முகம், நீதிபதி ராஜன் ஆகியோர் அடங்கிய டிவிஷன்பெஞ்ச் கோபாலை ஜாமீனில் விடுவிக்க இன்று உத்தரவிட்டது.

தங்களது தீர்ப்பில், இந்த வழக்கை விசாரிக்கும் பொடா நீதிமன்றம், கோபால் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும்ஆதாரங்கள் குறித்தும் சரியாக, மனம் ஒன்றி விசாரிக்காமல் சிறை வாசத்தை மட்டும் நீடித்துள்ளது.

இந்த வழக்கில் கைதானவரின் உரிமைமைய நிலை நாட்ட அரசியல் சட்டமும், உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் சரியாகக் கடைபிடிக்கப்படவில்லை.

எனவே, கோபாலை ஜாமீனில் விடுவிக்கிறோம். கோபால் சென்னையில் தங்கியிருந்து வாரம் ஒரு முறை பூந்தமல்லிபொடா நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும். நீதிபதியின் அனுமதி இல்லாமல் தமிழகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது.

இவ்வாறு தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் கூறினர்.

மேலும் பொடா வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் கோபால் வழக்கைவிசாரிக்குமாறு பொடா நீதிபதி ராஜேந்திரனை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

வீரப்பனுடன் உள்ள தமிழர் விடுதலை இயக்கத்தினருடன் கோபாலுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி கோபாலைசிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியும், தமிழர் விடுதலைப் படைநோட்டீஸ்களும் கைப்பற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டியது.

ஆனால் அதை மறுத்தார் கோபால். கோபாலிடம் பிடிபட்டது ரிவால்வர், நாட்டுத் துப்பாக்கி, ரைபிள் என மாற்றிமாற்றி குற்றப் பத்திரிக்கையிலும், நீதிமன்றத்திலும் குழப்பியது சிபிசிஐடி.

இதைச் சுட்டிக் காட்டித் தான் கோபால் ஜாமீன் பெற்றார். அதை உச்ச நீதிமன்றம் சென்று ரத்து செய்து கோபாலைதொடர்ந்து சிறையில் வைத்திருந்தது தமிழக அரசு.

இந் நிலையில் மீண்டும் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கோபாலுக்கு பொடா வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும்கூட அவர் மீது வேறு சில வழக்குகள் உள்ளதால் அவர் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+