கோபால் விடுதலைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டெல்லி:
நக்கீரன் கோபால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்யுமாறு கோரிய தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
பொடா வழக்கில் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஜாமீனில்விடுதலை செய்யப்பட்டார். நேற்று காலை அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஜெயலலிதா அரசின்கொடுங்கோலாட்சிக்குக் கிடைத்துள்ள முதல் அடியே தனது விடுதலை என்று அவர் கூறினார். பின்னர் திமுகதலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந் நிலையில் கோபாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தமிழக அரசின் சார்பில் அவசர அவசரமாக நேற்று மாலை உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி வி.என்.காரே, நீதிபதிகள் லோஹத்தே, பிரஜேஷ் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்சுக்கு மனுவை அனுப்பினார்.
மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள் கோபாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுத்து விட்டனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கோபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு குளிர்கால விடுமுறைக்குப் பின்னர் விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர்.
நெடுமாறன் ஜாமீன் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்ததும், அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததோடு, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications