காங் கூட்டணி: கருணாநிதியுடன் பேச வருகிறார் கர்நாடக முதல்வர்
சென்னை & டெல்லி:
தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும், இதற்காக ஜெயின் கமிஷன் விவகாரம் உள்ளிட்டபழைய சம்பவங்களை மறக்கவும் தயாராக உள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயபால் ரெட்டிகூறியுள்ளார்.
கூட்டணி குறித்து பேச்சு நடத்த சோனியாவின் சார்பில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, திமுக தலைவர்கருணாநிதியைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்றும் தெரிகிறது. இன்று மாலை கருணாநிதியை மயிலாடுதுறைஎம்.பியும் சோனியாவுக்கு நெருக்கமானவருமான மணிசங்கர் அய்யர் சந்தித்துப் பேசுகிறார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசி ஜெயபால் ரெட்டியிடம்,
ராஜீவ் காந்தி கொலைச் சதியில் திமுகவுக்கும் தொடர்பிருப்பதாக ஜெயின் கமிஷன் கூறிய குற்றச்சாட்டை பலமுறைகாங்கிரஸ் உயர்த்திப் பிடித்து கோஷம் போட்டதே, இதற்காக திமுக இடம் பெற்றிருந்த குஜ்ரால் அரசைக் கூடகவிழ்த்ததே? மேலும் திமுக- புலிகள் தொடர்பு இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் பலமுறை பேசிவந்துள்ளார்களே. அப்படிப்பட்ட கட்சியுடன் எப்படி கூட்டணி வைப்பீர்கள்? என்று கேட்டனர்.
இதற்கு பதிலளித்த ரெட்டி, தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் மதச்சார்பின்மையும் ஒற்றுமையும் பெரும்ஆபத்தில் உள்ளன. எனவே கடந்த கால முரண்பாடுகளை மறந்து விட்டு கைகோர்க்க வேண்டிய சூழல் நிலவுகிறது.தமிழகத்தைப் பொருத்தவரை திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளனஎன்றார்.
மதிமுகவுடன் கூட்டணி ஏற்படுமா என்று கேட்டபோது, புதிய கூட்டணிகள் அமைவதை தவிர்க்க முடியாது என்றுஅவர் பதிலளித்தார். திமுகவுடன் கூட்டணி வைப்பதோடு, விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரானவைகோவையும் கூட்டணியில் சேர்க்க சோனியா காந்தி சம்மதம் தெரிவித்து விட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
கிருஷ்ணாவிடம் வேலை:
இதற்கிடையே சோனியா காந்தியின் சார்பில் கருணாநிதியுடன் பேசி கூட்டணியை முடிவு செய்யும் பொறுப்புகர்நாடக முதல்வர் கிருஷ்ணாவிடம் தரப்படும் என்று தெரிகிறது.
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது அவரை மீட்க அப்போதைய முதல்வர்கருணாநிதியுடன் இணைந்து செயலப்பட்டது முதல் கிருஷ்ணாவுக்கும் கருணாநிதிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.மேலும் கருணாநிதிக்கு நெருக்கமான முன்னாள் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவனுக்கும் நெருக்கமானவர்கிருஷ்ணா.
இதனால், கிருஷ்ணாவும் இளங்கோவனும் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தைகளில் இறங்குவார்கள் என்றுதெரிகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் வாசனும் ஒதுக்கப்படாமல் அவருக்கும் முக்கிய பங்கு தரப்படும்என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளை சுர்ஜித் வருகிறார்:
இந் நிலையில் திமுகவு- காங்கிரஸ் -இடது சாரிக் கட்சிகளுடான கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஹகிஷன் சிங் சுர்ஜித் நாளை சென்னை வருகிறார்.
தனது கட்சியினருடன் பேச்சு நடத்திவிட்டு நாளை மறுதினம் கருணாநிதியை சந்தித்துப் பேசுகிறார்.
வாசன் நம்பிக்கை:
தமிழகத்திலும், தேசிய அளவிலும் அமையவுள்ள புதிய மத்சார்பற்ற கட்சிகளின் கூட்டணியால் மத்தியிலும்அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் நல்லாட்சி மலரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்கூறியுள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் புத்தாண்டு கொண்டாடிய வாசன் நிருபுர்களிடம் பேசுகையில், இந்தப் புத்தாண்டில்சோனியாகாந்தி தலைமையில் மத்தியில் நல்லாட்சி மலரும். அதேபோல, தமிழகத்திலும் புதிய ஆட்சி மலரும்என்றார்.
கூட்டணியில் ப.சிதம்பரமும் இணைவார்:
அதிமுக- பா.ஜ.கவுக்கு எதிராக திமுக அமைக்கும் கூட்டணியில் பா.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப்பேரவையும் இணையும் என்று அக் கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியின் சார்பில்சிவகங்கையில் சிதம்பரம் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
தனி நீதிமன்றம் தயார்: கர்நாடக அமைச்சர்
கூட்டணி குறித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பேச்சு நடத்தவுள்ளார் என்றுகூறப்படும் நிலையில், முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம்அமைக்கப்பட்டு தயாராக உள்ளதாக கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூல் தனிநீதிமன்றத்திற்குத் தேவையான அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டன. எப்போது வேண்டுமானாலும்செயல்படும் வகையில் தனி நீதிமன்றம் ரெடியாக உள்ளது.
எந்தவித பாதுகாப்புப் பிரச்சினையும் இன்றி விசாரணை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனஎன்றார்.












Click it and Unblock the Notifications