ஜெவை சந்திக்கிறார் ஜேட்லி
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க பா.ஜ.க. விரும்புவதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் கூட்டணிகுறித்துப் பேச்சு நடத்த சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி இன்று சென்னை வருவார் என்று தெரிகிறது.
கூட்டணி விஷயத்தில் எப்போதும் அதிமுக தான் வேகமாகக் காய் நகர்த்தும். இந்த முறை திமுக தலைவர்கருணாநிதி முந்திக் கொண்டுவிட்டார். காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுகவை வளைத்துவிட்ட அவர் பா.ம.கவையும்உள்ளே கொண்டு வந்துவிடுவதில் தீவிரமாக உள்ளார்.
இந் நிலையில் கொஞ்சம் மெதுவாகவே சுதாரித்துக் கொண்டாலும் ஜெயலலிதாவும் பா.ஜ.கவும் மிக வேகமாகஅரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளனர்.
ஜெயலலிதாவுடன் துணைப் பிரதமர் அத்வானி தொலைபேசியில் நேற்று ஆலோசனை நடத்தியதையடுத்துஅவரது வலது கரமான ஜேட்லி சென்னை வருகிறார். இன்று மாநில பா.ஜ.கவினருடன் ஆலோசனை நடத்திவிட்டுநாளை ஜெயலலிதாவை சந்திப்பார் என்று தெரிகிறது.
பா.ம.க. தலைவர் ராமதாஸையும் அவர் சந்திக்க வாய்ப்பிருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசிய தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்ராதாகிருஷ்ணன்,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றிபெறவும், வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி தொடரவும், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவேண்டியது அவசியம்.
தமிழக பா.ஜ.க.வின் விருப்பம் இதுதான். அப்போதுதான் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுமிக்கதாகஅமையும். கூட்டணிக்கு முதல்வர் ஜெயலலிதாவே தலைமை தாங்க வேண்டும். பா.ம.க. தலைவர் ராமதாசும்எங்களுடனேயே இருப்பார் என்று நம்புகிறோம்.
திமுக-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சிகளின் சந்தர்ப்பவாத கூட்டணியை முறியடிப்பது மிக அவசியம். மதிமுகவைப்பொறுத்தவரை, அவர்களை எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்துகிறோம். திமுகவில் இணைந்துமதிமுக,மறைகின்ற திமுக ஆகிவிடக் கூடாது.
வயதில் முதிர்ந்த கருணாநிதி, ஆத்திரத்தில் பா.ஜ.க. தலைவர்கள் சிலரை விஷ ஜந்துக்கள் என்று கூறியிருக்கிறார்.அவரை நாங்கள் விஷக் கிருமி என்று சொல்ல மாட்டோம். ஆனால், கடந்த 4 ஆண்டுகாலம் தே.ஜ. கூட்டணியில்இருந்தது பதவி சுகத்துக்காகவா அல்லது சுயமரியாதையற்ற பயம் காரணமாகவா என்பதை கருணாநிதி விளக்கவேண்டும் என்றார்.
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமையாவிட்டால் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுமா என்ற கேள்விக்கு அவர்பதிலளிக்க மறுத்து விட்டார்.
முதல்வர் ஜெயலலிதா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி அவருடன்கூட்டணி குறித்து பேச்சு நடத்த வருவது அரசியல் புருவங்களை உயரச் செய்துள்ளது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications