கூட்டணி: கருணாநிதிக்கு உதவியாய் தயாநிதி மாறன்
சென்னை:
ஜனவரி மாத இறுதிக்குள் கூட்டணி முடிவாகி விடும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுகவுடனான உறவு குறித்து சோனியா காந்தியின் சார்பில் காங்கிரஸ் எம்.பி மணிசங்கர அய்யர் கருணாநிதியைசந்தித்துப் பேசினார்.
பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்துவிடுவோம். சோனியா காந்தியுடன் நடந்த தொலைபேசி பேச்சுதான் கூட்டணி தொடர்பான முதல் நடவடிக்கை.தற்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இறுதிப் பேச்சுவார்த்தைக்கு தூதராக யார் வருவார் என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் முடிவுசெய்ய வேண்டும். எப்போது பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதையும் அவர்தான் கூற வேண்டும் என்றார்.
இந் நிலையில் தன் சார்பில் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவைஅனுப்பி வைக்க சோனியா முடிவு செய்துள்ளார். கிருஷ்ணாவைத் தொடர்ந்து குலாம் நபி ஆசாத், மன்மோகன் சிங்போன்ற தலைவர்கள்கருணாநிதியைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.
கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகளின்போது முரசொலி மாறனின் இளைய மகன் தயாநிதி மாறனையும் தன்னுடன்வைத்திருக்க ஆரம்பித்துள்ளார் கருணாநிதி. சோனியாவுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தியபோதும் தயாநிதிஉடனிருந்தார். அவரும் சோனியாவுடன் பேசினர்.
மணிசங்கர அய்யர் தன்னைச் சந்தித்தபோதும் தயாநிதியை கருணாநிதி உடன் வைத்துக் கொண்டேஆலோசனைகள் நடத்தினார். எம்.பி.ஏ. பட்டதாரியான தயாநிதியின் இப்போது சுமங்கலி கேபிள் விஷன்நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
முரசொலி மாறன் மறைவால் திமுகவுக்கு டெல்லியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தயாநிதியை கொண்டு நிரப்பகருணாநிதி முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications