வீரப்பன் வேட்டை: கோபிநத்தத்தில் வாகன போக்குவரத்திற்கு தடை!
சேலம்:
பெளர்னமி தினம் வருவதையொட்டி வீரப்பன் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அதிரடிப்படையினர் தீவிரவேட்டையில் இறங்கியுள்ளனர். வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தத்தில் இரவு நேர வாகன நடமாட்டத்திற்குஅதிரடிப்படையினர் தடை விதித்துள்ளனர்.
பெளர்னமி மற்றும் அமாவாசை தினங்களில் காட்டுப் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கச் சென்று வணங்கி விட்டுமுக்கிய காரியங்களில் ஈடுபடுவது சந்தனக்கடத்தல் வீரப்பனின் வழக்கம். இந் நிலையில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு சமீப காலமாக வீரப்பன் நடமாட்டம் ஆங்காங்கே இருப்பதாக அதிரடிப்படைக்குத் தகவல்கள் வந்துகொண்டுள்ளன.
இந் நிலையில் நாளை பெளர்னமி தினம் என்பதால் வீரப்பன் ஏதாவது காரியத்தில் ஈடுபட முயலலாம் என்றுஅதிரடிப்படை சந்தேகப்படுகிறது. இதையடுத்து வீரப்பன் நடமாட்டம் உள்ள பாலா-கோபிநத்தம் பிரிவில்பல்வேறு சோதனைச் சாவடிகளை அதிரடிப்படையினர் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கோபிநத்தம் கிராமத்தில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வகான போக்குவரத்திற்குஅதிரடிப்படை தடை விதித்துள்ளது. மக்கள் நடமாட்டத்தையும் அதிரடிப்படை வீரர்கள் தீவிரமாக கண்காணித்துவருகிறார்கள்.
காட்டை விட்டு வீரப்பன் வெளியே வந்தால் நிச்சயம் சிக்குவான் என்று அதிரடிப்படை வீரர்கள் உறுதியாகக்கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
