மர்மமாய் இறந்த சென்னை மாணவி: காதல் கடிதம் சிக்கியது
சென்னை:
நுங்கம்பாக்கத்தில் 10 மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் மரணமடைந்த மாணவிஷில்பா கோபிநாத் தனது காதலருக்கு எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது.
சின்மயா மிஷன் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்த இந்த மாணவி, நேற்று முன் தினம், பள்ளியில் இருந்துபாதியிலேயே வெளியே வந்தார். சிறிது நேரத்தில் 10 மாடிக் கட்டடத்தில் இருந்து தலைகுப்புற விழுந்து, அந்தஇடத்திலேயே பிணமானார். இது தற்கொலையா அல்லது யாராவது கீழே தள்ளிவிட்டு கொலை செய்தார்களாஎன்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந் நிலையில் அவருக்கு ஒரு காதலர் இருப்பதும் மரணத்துக்கு முன் அவருக்கு ஷில்பா ஒரு கடிதம் எழுதியதும்உறுதியாகியுள்ளது.
ஷில்பாவின் தந்தை கோபிநாத், மெரைன் இன்ஜீனியர் ஆவார். தாயார் நந்தினி. இந்த தம்பதியருக்கு சுமிதா என்றமூத்த மகளும் உள்ளார். சுமிதா அமெரிக்காவில் படித்து வருகிறார். இவர்களது வீடு அண்ணாநகர் 13 வதுமெயின்ரோட்டில் உள்ளது.
ஷில்பா அண்மையில் நடந்த அரையாண்டுத் தேர்வில் காப்பியடிக்கும்போதும் பிடிபட்டுள்ளார். இந்த விஷயம்அவரது தந்தைக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் ஷில்பாவைக் கண்டித்துள்ளார். அதேநேரத்தில் ஷில்பா பள்ளியில்உடன்படிக்கும் வினோடா என்பவரைக் காதலித்தது அவரது அம்மாவிற்குத் தெரியவந்து, அது தொடர்பாகவும்ஷில்பாவை பெற்றோர் கடிந்து கொண்டனராம்.
இதனால் மனமுடைந்த ஷில்பா தற்கொலை செய்திருக்கலாம் என்று, இந்த வழக்கை விசாரித்து வரும்நுங்கம்பாக்கம் போலீஸார் கூறுகின்றனர். தற்கொலைக்கு முன் ஷில்பா வினோடாவுக்கு எழுதிய கடிதத்தைபோலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதில், என் அன்பு உள்ளமே, உன்னைப் பிரிய மனமில்லை. இருந்தாலும் உன்னையும், இந்த உலகத்தையும்விரைவில் பிரியப் போகிறேன். உன்னை நிறையத் திட்டியுள்ளேன். என்னை மன்னித்துவிடு என்று ஆங்கிலத்தில்எழுதியுள்ளார்.
இதனையடுத்து வினோடாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர், ஷில்பாவைக் காதலிக்கவில்லைஎன்று மறுத்துள்ளார். போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இந் நிலையில் ஷில்பாவின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைசெய்யப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதை தற்கொலை என்ற கோணத்தில் மட்டுமின்றி, மாடியில் இருந்து யாராவது தள்ளிவிட்டார்களா என்றரீதியிலும்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் இளைஞர்கள், அந்தப்பகுதியின் ரெளடிகள், ஆட்டோ டிரைவர்கள் என பல தரப்பிலும் சுமார் 50 பேரிடம் இதுவரை விசாரணைநடந்துள்ளது.


Click it and Unblock the Notifications
