தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து பொடா மறு ஆய்வுக் குழு
டெல்லி:
வைகோ உள்ளிட்டவர்கள் மீதான வழக்கு தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும்என்ற தமிழக அரசின் கோரிக்கையை பொடா மறு ஆய்வுக் குழு நிராகரித்துவிட்டது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மற்றும் நிர்வாகிகள், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் தங்களைபொடா சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து பொடா மறு ஆய்வுக் குழுவிடம் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு பொடா மறு ஆய்வுக் குழு உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து தமிழக அரசு விளக்கம் அளித்தது. அதில், இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.இவற்றை மறு பரிசீலனை செய்ய பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு உரிமை இல்லை என்று விளக்கத்தில் தமிழகஅரசு கூறியிருந்தது.
இதையடுத்து எங்களுக்கு ஏன் அந்த உரிமை இல்லை என்பதை விளக்கவும் என்று கேட்டு, தமிழக அரசுக்குபொடா மறு ஆய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விளக்கம் அளிக்க இன்று வரை தமிழக அரசுக்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் பொடா மறு ஆய்வுக் குழு முன் இன்று ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞரான வைத்தியநாதன்,பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்வழங்கியது குறித்த ஆவணம் இன்று தான் எங்களுக்குக் கிடைத்தது. எனவே விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம்தேவை என்று கோரினார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த பொடா ஆய்வுக் குழு தலைவர் நீதிபதி சஹாரியா, கால அவகாசத்தை நீட்டிக்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் வைகோ, நக்கீரன் கோபால் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் தமிழக அரசுத் தரப்புவழக்கறிஞர்களும் இடையிலான வாதம் தொடங்கியது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications