ஸ்பிக் ஊழலுக்கு ஜெயலலிதா தான் முழுக் காரணம்: சிபிஐ
சென்னை:
அரசின் பங்குகளை ஸ்பிக் நிறுவனத்துக்கு அடிமாட்டு விலைக்கு விற்று, அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதற்குமுதல்வர் ஜெயலலிதா முழுக்க, முழுக்கக் காரணம் என சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் மத்தியப் புலனாய்வுப் பிரிவான, சிபிஐ இன்று ஒருமனு தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1992ம் ஆண்டில் அரசிடம் இருந்த ஸ்பிக் நிறுவனத்தின் பங்குகளை அந்த நிறுவனத்துக்கே மிகக் குறைந்தவிலைக்கு திருப்பித் தர தமிழக அரசு எடுத்த முடிவுக்கு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தான் முழுக்க,முழுக்கக் காரணம். இந்த முடிவை வேறு யாரும் எடுத்திருக்க வாய்ப்பே இல்லை.
ஜெயலலிதாவின் இந்தச் செயலால் ஸ்பிக் நிறுவன அதிபர் ஏ.சி.முத்தையா செட்டியாருக்கு கொள்ளை லாபம்கிடைத்தது. இதனால் அரசு நிறுவனமான டிட்கோவுக்கு ரூ. 28.29 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
இதில் பெரும் முறைகேடும், ஊழலும் நடந்துள்ளது. ஜெயலலிதாவும் அப்போதைய டிட்கோ தலைவர்ராமச்சந்திரனம் சேர்ந்து தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஸ்பிக் நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கச்செய்வதற்காக அரசின் பங்குகளை மிகக் குறைந்த விலைக்கு அவர்களிடம் விற்றுள்ளனர்.
இதன்மூலம் ஏ.சி.முத்தையா செட்டியாரின் தந்தையான மறைந்த எம்.ஏ.சிதம்பரம் செட்டியாருக்கு ஸ்பிக் நிறுவனதலைவர் பதவி கிடைக்கச் செய்துள்ளனர். இது ஒரு திட்டமிட்ட சதியாகும் என்று சிபிஐ கூறியுள்ளது.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications