ராஜீவ் கொலையில் திமுகவுக்கு தொடர்பில்லை: காங்கிரஸ்
டெல்லி&விழுப்புரம்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுகவுக்கோ, திமுக தலைவர்களுக்கோ தொடர்பில்லை என்று காங்கிரஸ்தலைவர்களுள் ஒருவரான பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுக மீது குற்றம் சுமத்திய காங்கிரஸ் இப்போது எப்படி திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம்என்று பிரதமர் வாஜ்பாய் எழுப்பியுள்ள கேள்விக்கு, நிருபர்களிடம் பதிலளித்த பிரணாப் முகர்ஜி,
1999ம் ஆண்டு வெளியான ஜெயின் கமிஷன் அறிக்கையில் ராஜீவ் காந்தி கொலைக்கும், திமுகவுக்கும் தொடர்பில்லை என்றுதெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதை காங்கிரஸ் முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.
நாட்டில் மதச்சார்பின்மை நிலவ வேண்டும் என்பதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகள், மதவாத சக்திகளுக்கு எதிராக கூட்டணிஅமைத்துள்ளன என்றார்.
திமுகவை குற்றம் சாட்டவில்லை: பா.ஜ.க. பல்டி
ஜெயின் கமிஷன் அறிக்கையைக் காட்டி திமுக மீது பா.ஜ.க. குற்றம் சாட்டவில்லை என்று தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர்ராஜா கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் நிருபர்களிடம் பேசிய அவர் பேசியதாவது:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுக மீது காங்கிரஸ் குற்றம் சுமத்தியது. அதைக் காரணம் காட்டி மத்தியில் ஒரு அரசேகலைவதற்கு காங்கிரஸ் காரணமாக இருந்தது. இப்போது அதே திமுகவுடன் கூட்டணி அமைப்பது சந்தர்ப்பவாதம். இப்பிரச்சனையில் பா.ஜ.க. குற்றம் சாட்டுவது காங்கிரசைத்தான், திமுகவை அல்ல.
திமுக மீது காங்கிரஸ் காங்கிரஸ் கூறியது உணர்ச்சிப் பூர்வக் குற்றச்சாட்டு. ஆனால் அதிமுகவுடன் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டதுஅரசியல் வேறுபாடு. எனவே, வாஜ்பாய் அரசை அதிமுகவுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்க முயல்வதை இதனுடன் ஒப்பிடமுடியாது.
356வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி அதிமுக அரசைக் கலைக்க ஒருமுறைகூட கோரியதில்லை என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார். ஆனால், அவர் கைது செய்யப்பட்டபோது திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் கூடியதிமுகவினர் அதிமுக அரசைக் கலைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றினர் என்றார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications