வைத்தீஸ்வரன் கோவில் யானைக்கு மீண்டும் மதம் பிடித்தது
சீர்காழி:
புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் யானை தையல்நாயகிக்கு மீண்டும் மதம் பிடித்து, கோவிலுக்குள்அங்குமிங்கும் ஓடி பக்தர்களை பீதிக்குள்ளாக்கியது.
வைத்தீஸ்வரன் கோவில் யானையான தையல்நாயகிக்கு சில மாதங்களுக்கு முன்பு மதம் பிடித்தது. இதையடுத்துகட்டியிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு கோவில் குளப் பகுதியில் அங்குமிங்கும் ஓடியது. மயக்க ஊசிபோட்டு யானையைப் பிடித்து மீண்டும் கட்டிப் போட்டனர்.
இந் நிலையில் மீண்டும் தையல்நாயகிக்கு மதம் பிடித்தது. சங்கிலியை அறுத்துக் கொண்ட யானை, சண்முகர்சன்னதியின் முன்பு இருந்த உண்டியலை உடைத்தது. பின்னர் அங்குமிங்கும் நடக்கத் தொடங்கியது.
யானையை அடக்க கோவில் ஊழியர்கள் முயன்று பார்த்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்துசத்தியமங்கலத்திலிருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
கோவிலில் இருந்த இன்னொரு யானையான பெரியநாயகியை வைத்து தையல்நாயகியை சமாதானப்படுத்தமுயன்றனர். ஆனால் பெரியநாயகியை, தையல்நாயகி துதிக்கையால் தாக்கியதில் பெரியநாயகி காயமடைந்தது.
பின்னர் சத்தியமங்கலம் கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி போட்டு தையல்நாயகியை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஏற்கனவே சில முறை இந்த யானைக்கு மதம் பிடித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு முதுமலை யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோதும் அடம் பிடித்துலாரியில் ஏற மறுத்தது. அப்போது பெரியநாயகியை வைத்துத்தான் தையல் நாயகியை லாரியில் ஏற்ற முடிந்ததுகுறிப்பிடத்தக்கது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications