இலவச வேட்டி, சேலை வழங்குவதில் குளறுபடி: மாநிலம் முழுவதும் பொதுமக்கள் போராட்டம்
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இலவச வேட்டி, சேலை வழங்குவதில்முறைகேடுகள் நடந்தன. இதையடுத்து பொதுமக்களும், விவசாயிகளும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகள், முதியோர்களுக்கு பொங்கல் திருநாளின்போது இலவச வேட்டி,சேலைகளை தமிழக அரசு வழங்குவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக இந்தத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு தேர்தல் வருவதால் மீண்டும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதாஅறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் இலவச வேட்டி, சேலைவ வழங்கும் பணி தொடங்கியது.
ஆனால் பல பகுதிகளில் அவை முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், பெண்கள் சாலை மறியல்,அதிகாரிகளை சிறை வைத்த, முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் இறங்கினர்.
கும்பகோணம் அருகே அணைக்குடி பகுதியில், மொத்தம் 259 பேருக்கு கடந்த ஆண்டு இலவச வேட்டி சேலைவழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 92 பேருக்கு மட்டுமே வேட்டி, சேலை வாங்குவதற்கான கூப்பன்கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் அணைக்குடி மக்கள் கொந்தளித்தனர்.
அனைவரும் ஒன்றாக திரண்டு வந்து கிராம நிர்வாக அலுவலரை அவரது அலுவலகத்திற்குள்ளேயே வைத்துப்பூட்டினர்.
உடனடியாக போலீஸார் விரைந்து வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தினர். ஆனால் இலவச வேட்டி, சேலைகொடுப்பதாக இருந்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் யாருக்கும் கொடுக்க வேண்டாம்என்று மக்கள் கோஷமிட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்திய போலீஸ் அதிகாரிகள், உள்ளே பூட்டி வைக்கப்பட்டிருந்த கிராம நிர்வாகஅலுவலரை பத்திரமாக மீட்டனர்.
இதேபோல, நாகை மாவட்டம் தேமங்கலத்திலும் கிராம நிர்வாக அதிகாரி முற்றுகைக்கு ஆளானார். மொத்தம்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 429 பேரில் பாதிப் பேருக்கு சொந்த வீடுகளும், நிலங்களும் உள்ளதாகவும், ஆனால்உண்மையான ஏழைகளுக்கு வேட்டி, சேலை வழங்கப்படவில்லை என்றும் கூப்பன் கிடைக்காத மக்கள் புலம்பினர்.
அதிமுகவினருக்கு மட்டுமே வேட்டி, சேலை வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதேபோல ஈரோடு மாவட்டம் தாராபுரம், நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஆகிய பகுதிகளிலும் போராட்டங்கள்நடந்தன. பரமத்தியில் பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் குதித்தனர். சேலம் மாவட்டம் ராசிபுரத்தைஅடுத்துள்ள குமாரபாளையத்திலும் போராட்டம் நடந்தது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications