இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளைகள், காளையர்கள் தயார்!!
மதுரை:
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று மாலை நடக்கிறது. இதைப் பார்த்து ரசிக்க ஏராளமான வெளிநாட்டினர்உள்பட ஆயிரக்கணக்கானோர் அலங்காநல்லூரில் குவிந்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. சீறிப் பாயும்காளைகளை அடக்க இளைஞர்கள் கூட்டம் திணவெடுத்து திரிவதையும், அவர்கள் காளைகளை அடக்கும் லாவகத்தையும்,மயிர்க்கூச்செறியும் சாகசங்களையும் காண வெளிநாட்டுக்காரர்கள் அதிக அளவில் அலங்காநல்லூருக்கு வருவது வழக்கம்.
இந்த ஆண்டும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவெளிநாட்டினர் மதுரை வந்துள்ளனர். அவர்கள் தமிழக சுற்றுல்லாத்துறை மூலம் மாலை அலங்காநல்லூருக்குக் அழைத்துவரப்படுவார்கள்.
அவர்களுக்கு கொண்டயம்பட்டி கிராமத்தில் நேற்று பொங்கல் விருந்தும் அளிக்கப்பட்டது.
சுவையான சர்க்கரைப் பொங்கல், பாயாசம், சாதம், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், அப்பளம், பல வகை பொறியல்கள் எனகொண்டையம்பட்டி கிராமத்து மக்கள் வெளிநாட்டுக்காரர்களை அசத்தி விட்டனர்.
இன்று மாலை 3 மணிக்கு மேல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடங்குகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அலங்காநல்லூரில்குவிந்து வருகின்றனர். ஏற்கனவே நூற்றுக்கணக்கான காளைகள் அலங்காநல்லூருக்கு வந்து விட்டன.
இந் நிகழ்ச்சியையொட்டி 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் ஜல்லிக்கட்டு மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. டாக்டர்கள் குழுவும் பிற்பகல் முதல் அங்கு நிறுத்தப்படும். மேலும் ஜல்லிக்கட்டில் அசம்பாவிதங்கள் ஏதும்நடந்தால் அதை எதிர்கொள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் சிறப்பு டாக்டர்கள் குழு தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் முழுவதும் மிக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேடு கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் காளைகளை அடக்கமுயன்று 180 பேர் காயமடைந்தனர்.
பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த700க்கும் மேற்பட்டகாளை மாடுகள் இதில் கலந்து கொண்டன. காளைகள் முட்டியதில் 180 பேர்காயமடைந்தனர். இவர்களுக்கு நடமாடும் மருத்துவ முகாம்களில் சிகிச்சை தரப்பட்டது. பலத்த காயமடைந்த 18 பேர் மட்டும்ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications