வலிப்பு நோயால் வேதனை: மாடியிலிருந்து குதித்து 12 வயது சிறுமி தற்கொலை
சென்னை:
அடிக்கடி வலிப்பு வந்ததால் மன வேதனை அடைந்த 12 வயது மாணவி, தான் தங்கியிருந்து விடுதியின் 6-வது மாடியிலிருந்துகுதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை நகரில் அடுக்கு மாடிக் கட்டடங்களிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் மாணவிகள் என்பதுதான்கொடுமை.
கடந்த 3 மாதங்களில் 4 பேர் இவ்வாறு கட்டடத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந் நிலையில், நேற்று சேத்துப்பட்டு பகுதியில் உள்ள 6 மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து 12 வயது மாணவி ஒருவர் தற்கொலைசெய்து கொண்டார்.
ஸ்பர்டங் சாலையில் ஆதரவற்றோர் தங்கிப் படிக்கும் விடுதி மற்றும் பள்ளி உள்ளது. இங்கு தங்கியிருந்தவர் சாயிரா பேகம்.பெற்றோர்களை இழந்ததால் சாயிரா பேகம் இங்கு தங்கிப் படித்து வந்தார். இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது.
இதனால் மற்றவர்களைப் போல சாதாரணமாக இருக்க முடியாத நிலை.
வலிப்பு நோய் காரணமாக மன வேதனை அடைந்த சாயிரா பேகம், சில வாரங்களுக்கு முன் கோடம்பாக்கம் பகுதியில் ஒருமாணவி 10வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டதை அறிந்தார்.
அதேபோல நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று தனது சக மாணவிகளிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து விடுதி வார்டன் சாயிராவை அழைத்து, கண்டித்து, அறிவுரை கூறியுள்ளார்.
இந் நிலையில் நேற்று விடுதியின் 6-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் அந்தச் சிறுமி சாயிரா பேகம்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications