ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 3 பேர் பலி, 400 பேர் காயம்
மதுரை:
மதுரை அருகே அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 2 பேரும், திருச்சி மாவட்டம்மணப்பாறை அருகே கலிங்கப்பட்டியில் ஒருவரும் இறந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள்நடந்தன. உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் நேற்று மாலை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது.
300க்கும் மேற்பட்ட காளைகள் இதில் கலந்து கொண்டன. ஆயிரக்கணக்கான பேர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக்காண கூடியிருந்தனர். 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள், சிறப்பு மேடையில் இருந்தபடி ஜல்லிக்கட்டுநிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.
மயிர்க்கூச்செறியும் வகையில் பல காளைகள் சீறிப் பாய, உயிரை துச்சமென மதித்த இளைஞர்கள் கூட்டம் பாய்ந்துசென்று காளைகளை பிடிக்க முயற்சித்தனர். இதில் பல இளைஞர்களுக்கு காயமடைந்தது. காளைகள் முட்டியதில் 2பேர் உயிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காளைகளை அடக்கி அதன் கழுத்தில், கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பட்டுத் துணிகளை அவிழ்த்த வீரஇளைஞர்களுக்கு பரிசாகத் தங்கக் காசுகள், வெள்ளிப் பாத்திரங்கள் வழங்கப்பட்ன.
இதேபோல, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கலிங்கப்பட்டி என்ற கிராமத்திலும் ஜல்லிக்கட்டு நடந்தது.இதில் செல்வராஜன் என்ற கூலித் தொழிலாளி காளை முட்டி பலியானார்.
சிவகங்கை மாவட்டம் சிறாவயல் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 100 பேர் காயமடைந்தனர். மொத்தத்தில்பல்வேறு பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications