திமுக விருதுநகர் மாநாட்டில் சோனியா- தயாநிதிக்கு எம்.பி. சீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணி (ஜ.மு.கூ)என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்களுடன் நாடாளுமன்றத் தேர்தல் குறித்துஆலோசனை நடத்திய கருணாநிதி பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,

இந்தக் கூட்டணி மத்தியிலும் மாநிலத்திலும் மதசார்பற்ற, ஜனநாயக அரசை அமைக்கப் பாடுபடும். திமுகவின்தேர்தல் அறிக்கையைத் தயார் செய்வதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் 9 பேர் கொண்ட குழுஅமைக்கப்பட்டுள்ளது. அனேகமாக விருதுநகர் மாநாட்டின்போதே தேர்தல் அறிக்கை வெளியிடப்படக் கூடும்.

மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அழைக்கலாம் என்று யோசிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முடிவு எடுத்து முறையாக அழைப்பு விடுக்கப்படும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து திமுக தாற்காலிகமாகவே விலகியிருப்பதாக பா.ஜ.க. பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரமோத் மகாஜன் கூறியிருக்கிறார். தேர்தலுக்குப் பின் மீண்டும் பா.ஜ.க. அணியில்நாங்கள் சேருவோம் என்றும் கூறியிருக்கிறார். அது அவரது சொந்தக் கருத்து. இனி பா.ஜ.க. கூட்டணியில் திமுகசேரவே சேராது என்றார்.

இந்தத் தேர்தலே பிரதமர் வாஜ்பாய்க்கும், சோனியா காந்திக்கும் இடையிலான போட்டிதான் என்று பா.ஜ.க.பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியிருக்கிறாரே என்று கேட்டபோது, நாங்கள் எந்தத் தனி நபரையும்முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதில்லை. கொள்கைளை முன் வைத்துப் போட்டியிடும் கட்சி தான் திமுக. அதைத்தான் இப்போதும் செய்யப் போகிறோம் என்றார்.

தலைமை தேர்தல் கமிஷனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு திமுக சார்பில் வாழ்த்துத்தெரிவித்து தந்தி அனுப்பியுள்ளேன் என்றும் கருணாநிதி தெரிவித்தார்.

முன்னதாக நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறனுக்குஎம்.பி சீட் கொடுப்பது குறித்து நான் ஏதும் கூற முடியாது. கட்சிதான் முடிவெடுக்க வேண்டும். தயாநிதி மாறன்டெல்லி சென்றதில் தவறில்லை. அவரது தந்தை உயிருடன் இருந்தபோது பலமுறை கட்சிக்காரர்களுடன் டெல்லிக்குசென்றுள்ளர். அதுபோலத்தான் தற்போதும் சென்று வந்தார்.

ஜாதிக் கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் நிச்சயம் இடம் இல்லை. தலித் என்றால் ஒதுக்கப்பட்டவர், சமூகத்தில்மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பவர் என்றுதான் பொருள். அரசியல் கட்சி என்று பொருள் வராது. புதியதமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி எனக்கு பொங்கல் வாழ்த்து கூறினார். ஆனால் திருமாவளவன்இதுவரை என்னை வந்து பார்க்கவில்லை என்றார்.

மத்திய சென்னையில் தயாநிதி போட்டி:

இந் நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தயாநிதி மாறன் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகஅறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தொகுதியில் அவரது தந்தை, மறைந்த முரசொலி மாறன் பலமுறை வெற்று பெற்றுள்ளார். கடந்த தேர்தலில்சுமார் 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இத் தொகுதியில் மாறன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+