திருமண மண்டபத்தில் பயங்கர தீ விபத்து: 52 பேர் சாவு: மாப்பிள்ளையும் பலி
திருச்சி:
ஸ்ரீரங்கத்தில் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட மிக பயங்கரமான தீ விபத்தில் மாப்பிள்ளை உள்பட 52 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் தீயில் சிக்கி படுகாயமடைந்தனர்.
ஸ்ரீரங்கம் தெற்குச் சித்திரை வீதியைச் சேர்ந்தவர் குரு ராகவேந்திரா (42). ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில்பணியாற்றி வந்த இவருக்கும் அதே ஊரில் உள்ள மல்லிகைப்பூ அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (32)க்கும்இன்று காலை திருமணம் நடக்க இருந்தது. ஜெயஸ்ரீ, திருச்சி ரங்கா நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகபணியாற்றி வருகிறார்.
ஸ்ரீரங்கம் பஸ் நிலையத்தின் அருகே ரங்கராஜபுரம் ஈ.வி.எஸ். தெருவில் உள்ள பத்மபிரியா திருமண மண்டபம்இந்தக் கல்யாணம் நடக்க இருந்தது.
மண்டபத்தின் மாடியில் கூரை வேயப்பட்டிருந்தது. மாப்பிள்ளை குரு ராகவேந்திரா மண மேடையில் அமரவைக்கப்பட்டிருந்தார். சுமார் 600 உறவினர்கள், நண்பர்களும் அந்த மாடியில் கூடியிருந்தனர். மணப்பெண் கீழ்தளத்தில் உள்ள தனது அறையில் இருந்தார்.
இந் நிலையில், இந்தக் கூரையில் காலை 9.30 மணியளவில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. ஓலைக் கூரையில்பற்றிய தீ மிக வேகமாகப் பரவியது. இதையடுத்து திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மொத்தமாக எழுந்து ஓடினர்.
மாடிப் படிகள் மிகக் குறுகலாக இருந்ததால் அவர்களால் வேகமாக வெளியேற முடியவில்லை. கூட்டம், கூட்டமாகமுட்டிக் கொண்டு அவர்கள் கீழே விழுந்தனர். இந்த நெரிசல், குழப்பத்தால் பெரும்பாலானவர்கள் மாடியைவிட்டுகீழே இறங்க முடியவில்லை.
இந் நிலையில் மாடியில் இருந்து இறங்கும் இடத்திலும் தீ பிடித்துக் கொண்டது. இதனால் படிகளை அடையமுடியாமல் பலரும் தவித்தனர். இதற்குள் தீயும் மிக வேகமாகப் பரவியது. தீயுடன் கூரை சரிந்து விழ, அந்தத் தீஅங்கிருந்தவர்களின் உடைகளில் பற்றிக் கொண்டது. மேலும் நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் சேர்களும் தீப் பிடித்துஎரிய ஆரம்பித்தன.
இதனால் ஏற்பட்ட புகையில் பலர் மயங்கி விழுந்தனர். அடுத்ததாக மண்டபத்தின் மர ஜன்னல்கள், கதவுகளிலும் தீவேகமாகப் பரவ ஒட்டு மொத்த மண்டபமும் சில நிமிடங்களில் தீப் பந்தமாக மாறியது. இதில் அந்த இடத்திலேயே52 பேர் உடல் கருகி பலியாயினர்.
இதில் 26 பேர் பெண்கள், ஒரு சிறுமி, 3 சிறுவர்களும் அடங்குவர்.
காலை 9.30 முதல் 10.30க்குள் முகூர்த்தம் நடக்க இருந்தது. இதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் திருமணமண்டபத்தில் கூடினர். சரியாக 9.30 மணியளவில், தாலி கட்ட நேரம் நெருங்கிய வேலையில், இந்தத் தீ விபத்துஏற்பட்டது.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கிய தனது 90 வயது தாத்தாவைக் தூக்கிக் கொண்டு வெளியே வர முயன்றுள்ளார்மாப்பிள்ளை குருராஜன். இதனால், அவரும் தாத்தாவும் தீயில் சிக்கி பலியாகியுள்ளனர்.
மணப்பெண் ஜெயஸ்ரீயை அவரது உறவுப் பெண் ஒருவர் சரியான நேரத்தில் மண்டபத்தைவிட்டு வெளியேஇழுத்துக் கொண்டு வெளியேறியதால் அவர் தப்பிவிட்டார். இந்த விபத்தில் 150க்கும் மேற்பட்டவர்களுக்குபயங்கரத் தீக் காயம் ஏற்பட்டுள்ளது.
சில மணித் துளிகளில் திருமண மண்டபமே எரிந்து சாம்பலானதில், மண்டபம் முழுவதுமே எரிந்து போனஉடல்களும், எரிந்து கொண்டிருக்கும் உடல்களுமாக மிகக் கோரமாகக் காட்சியளித்தது.
மண்டபம் மிகக் குறுகலான சந்துக்குள் இருந்ததால், வெளியில் இருந்தவர்களாலும் உள்ளே சென்று யாரையும்காப்பாற்ற முடியவில்லை.
தகவல் அறிந்து திருச்சி. ஸ்ரீரங்கத்தில் இருந்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். ஆனால், அவர்கள்வருவதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. படுகாயமடைந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைகள், தனியார்மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மணப் பெண்ணின் தந்தை ஹனுமந்த ராவ் பார்வையற்றவராவார். அவர் ஒரு ஒய்வு பெற்ற ரயில்வே தொழிலாளிஎன்று தெரிய வந்துள்ளது.
தீ விபத்துக்கு காரணம் என்ன?
தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என தீயணைப்புப் படையினர் கூறுகின்றனர். ஓலைக் கூரையில்போடப்பட்டிருந்த சீரியல் செட் லைட்டுகளின் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே கூரையில் தீப் பிடித்ததாகக்கூறுகின்றனர்.
விபத்தை நேரில் பார்த்த சாந்தகுமார் என்பவர் கூறுகையில், திருமண நிகழ்ச்சியைப் படமெடுக்க வந்தவீடியோகிராபர்கள் தங்களது போகஸ் விளக்கின் பிளக்கை செருகியபோது அது வெடித்துச் சிதறியது.அதிலிருந்து பரவிய தீ தான் ஓலையில் பிடித்துக் கொண்டது என்றார்.
மேலும் தீயில் உடல் எரிந்துபோன பலரும் எப்படியாவது வெளியேறிவிட முயன்றனர். ஆனால், படிக்கட்டு மிகக்குறுகலாக இருந்ததால், ஒருவர் மீது ஒருவர் நெருக்கியடித்து விழுந்து இறந்துவிட்டனர் என்றார் கண்ணீருடன்.
தீயணைப்புப் படையினர் மிகக் காலதாமதமாகவே வந்து சேர்ந்ததாகவும், எரிந்து கிடந்த உடல்கள் இரண்டுவாகனங்களில் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சாஸ்திகள் வளர்த்துக் கொண்டிருந்த யாகத்திலிருந்து எழுந்த தீப்பொறி பந்தல் கூரையில் பட்டு தீப் பிடித்துக்கொண்டதாக ஒரு சிலர் கூறினர்.
ஆனால், சமையல் அறையில் சிலிண்டெர் வெடித்ததாகவும், திருஷ்டி கழிக்கப்பட்ட கற்பூரத்தை வெளியில்கொட்டியபோது அதிலிருந்த தீ மண்டப வாயிலில் இருந்த கொட்டகையில் பரவி, அப்படியே மாடிக்கும்பரவியதாகவும் சிலர் கூறுகின்றனர்.
சம்பவ இடத்தை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications