ஸ்பிக் ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுதலை
சென்னை:
ஸ்பிக் பங்கு பத்திர ஊழல் வழக்கில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட மூன்று பேரையும் நிரபராதிகள்என அறிவித்து தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் வசம்இருந்த ஸ்பிக் நிறுவன பங்குகளை ஸ்பிக்குக்கே விற்றதில் ரூ.29 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக கூறி ஜெயலலிதா, முன்னாள் தொழில்துறைச் செயலாளர்ராமச்சந்திரன், ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ.சி.முத்தையா ஆகியோர் மீது சென்னை தனிநீதிமன்றத்தில் சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
பங்குகளை விலையைக் குறைத்து விற்க முடிவு செய்தது ஜெயலலிதாதான். அவர் தான் இந்த முழுச்சதிக்கும் காரணம் என சிபிஐ கூறியிருந்தது.
இந்த வழக்கில் கடந்த மாதமே விசாரணை முடிவடைந்துவிட்டது. ஆனால் தீர்ப்பை வெளியிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந் நிலையில், தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம்இந்த மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளதால், தீர்ப்பை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ராமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார்.
ராமச்சந்திரனின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பு வழங்கலாம் என்று அனுமதி வழங்கியது. இதையடுத்துஇன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஜெயலலிதா, ராமச்சந்திரன், ஸ்பிக் நிறுவனதலைவர் ஏ.சி.முத்தையா ஆகியோர் இன்று காலை நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்றும் நீதிபதிஉத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து இன்று காலை ஜெயலலிதா தனதுதோழி சசிகலாவுடன் நீதிமன்றம் வந்தார்.
அப்போது தீர்ப்பு பிற்பகலில் வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்ததால், ஜெலலிதா, சசி அங்கிருந்து திரும்பிச்சென்றனர். இதைத் தொடர்ந்து பிற்பகலில் நீதிபதி ராஜமாணிக்கம் தனது தீர்ப்பை அறிவித்தார்.
அவர் அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா, ராமச்சந்திரன், ஏ.சி.முத்தையா ஆகியோர் மீதானகுற்றச்சாட்டுகளை சிபிஐ சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவில்லை. ஸ்பிக் நிறுவன பங்குகளைவிற்றதால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதை நிரூபிக்கவும் போதுமான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய தவறி விட்டது.எனவே, மூவரையும் நிரபராதிகள் என அறிவித்து இந் நீதிமன்றம் விடுவிக்கிறது என்று அறிவித்தார்.
மேலும் ஆளுநரின் அனுமதியின்றி ஜெயலலிதா மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராமச்சந்திரன் ஆகியோர் மீதுவழக்குத் தொடர்ந்ததும் தவறானது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
ஜெயலலிதா வருகையொட்டி தனி நீதிமன்றம் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம் மற்றும்அப்பகுதி சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications