காங். ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் சேர மாட்டோம்: கருணாநிதி
சென்னை:
காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால், அமைச்சரவையில் சேர மாட்டோம் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
நக்கீரன் பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்குவெற்றி கிடைத்து ஆட்சி அமைத்தால், காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் திமுக இடம் பெறாது. அப்படிஒரு எண்ணம் இப்போது இல்லை.
இருப்பினும் இது எனது எண்ணம்தான். கட்சியின் செயற்குழு, பொதுக்குழு என்ன முடிவு எடுக்கிறதோஅதன்படிதான் திமுக நடக்கும். என்னைப் பொருத்தவரை மத்தியில் ஆட்சியில் பங்கேற்க வேண்டாம் என்றுகருதுகிறேன்.
காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தால் சோனியா காந்தியேபிரதமராக வேண்டும் என்று விரும்புகிறேன். அவருக்குத்தான் நாங்கள் ஆதரவு தெரிவிப்போம்.
தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற விரும்புகிறேன். காரணம், அதிக எம்.பிக்கள் திமுகவுக்குஇருந்தால்தான் தமிழக நலன்களுக்காகப் போராட முடியும். திமுகவிடம் 24 எம்.பிக்கள் இருந்ததால்தான் சேலம்உருக்காலையை கொண்டு வர முடிந்தது. வங்கிகளை தேசியமயமாக்குவதற்கான நடவடிக்கையிலும் திமுகவினால்ஈடுபட முடிந்தது.
விருதுநகர் மாநாட்டுக்கு சோனியா காந்தியை கூப்பிடும் எண்ணம் இல்லை. இருப்பினும், நானும், சோனியாவும்சேர்ந்து கூட்டுப் பிரசாரத்தில் ஈடுபடுவோம்.
தலித் கட்சிளுக்கு சட்டசபைத் தேர்தலின்போது போதுமான இடங்கள் கொடுக்கப்படும். கடந்த தேர்தலில் தலித்கட்சிகளுக்கு நிறைய இடங்கள் கொடுக்கப்பட்டதை யாரும் மறக்கக் கூடாது என்று கூறியுள்ளார் அவர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications