நாளை காங்கிரஸ்- திமுக தொகுதி உடன்பாடு கையெழுத்து
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல்நாத் இன்று மீண்டும் சந்தித்து தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இரு கட்சிகளும் நாளை தொகுதிப் பங்கீட்டில்கையெழுத்திட உள்ளன.
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், குமரி அனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி, சட்டசபைகாங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோருடன் இன்று காலை அண்ணா அறிவாலயம் சென்றார் கமல்நாத்.
அவர்கள் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின், தயாநிதி மாறன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி ஆகியோருடன் பேச்சுநடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத்,
தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசி முடிவு செய்துவிட்டோம். பேச்சுவார்த்தை மிக மிக சுமூகமானதாக இருந்தது. பாண்டிச்சேரிதொகுதி குறித்தும் பேசினோம். ஆனால், அது குறித்து பிரச்சனை ஏதும் எழவில்லை. தொகுதிப் பங்கீட்டின்போது இதுபோன்றபிரச்சினைகள் எழுவது சகஜம்தான்.
நாளை மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியை நாங்கள் நேரில் சந்தித்துப் பேச உள்ளோம். அப்போது காங்கிரஸ் கட்சிக்குஒதுக்கப்படும் தொகுதிகள் விவரம் வெளியாகும். தொகுதிப் பங்கீடும் நாளையே முடிவடைந்துவிடும். கருணாநிதியை சந்திக்கும்முன் தமிழக காங்கிரஸ் தேர்தல் குழுவின் கூட்டமும் கூட்டப்படும்.
எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்பது முக்கியமல்ல. திமுக தலைமையிலான கூட்டணி அனைத்துத்தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்பது தான் முக்கியம். இதன் மூலம் பா.ஜ.க.- அதிமுகவுக்கு சரியான பாடம் புகட்டுவோம்என்றார்.
பாண்டிச்சேரியை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கக் கோரி கருணாநிதியிடம் கமல்நாத் தலைமையிலான காங்கிரசார் கோரிக்கைவைத்தும் அதை திமுக ஏற்கவில்லை. பா.ம.க. ஆதரவுடன் திமுக எம்.எல்.ஏக்களும் வாக்களித்து ஒரு காங்கிரஸ் வேட்பாளரைராஜ்யசபா எம்.பியாக்குவதாக கமல்நாத்திடம் கருணாநிதி உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து பாணடிச்சேரி குறித்து பேசுவதை காங்கிரஸ் இன்றுடன் நிறுத்திக் கொள்ளும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் 14தொகுதிகளாவது தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கோரி வருகிறது. ஆனால், அதிகபட்சமாக 10 மட்டுமேசாத்தியம் என திமுக கூறிவிட்டது.
இந் நிலையில் திமுக தலைமையுடன் காஙகிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நேரடியாகப் பேசி வருகிறார். இடப் பங்கீடுகுறித்தும் கருணாநிதியும், சோனியாவும் தொலைபேசி மூலம் பேசி முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து நாளைதொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இதற்கிடையே வரும் பிப்ரவரி 21, 22ம் தேதிகளில் விருதுநகரில் நடக்கவுள்ள திமுகவின் தென் மண்டல மாநாட்டில் கூட்டணிக்கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என கருணாநிதி அறிவித்துள்ளார். இதில் சோனியா காந்தியும் பங்கேற்கலாம் என்றுதெரிகிறது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications