திமுக-காங்கிரஸ் கூட்டணி கலாட்டா
சென்னை:
திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே தொகுதிகள் பங்கீடு தொடர்பாக நேற்றிரவு வரை உடன்பாடு ஏற்படவில்லை.இதையடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாவதும் ஒத்தி வைக்கப்பட்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.
காங்கிரசுக்கு 10 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டதால் இது தொடர்பாக நடந்தபேச்சுவார்த்தைகளில் முட்டுக் கட்டை ஏற்பட்டுவிட்டது. மேலும் பாண்டிச்சேரியை பா.ம.கவுக்குத் தந்துவிட்ட திமுக, அதைமீண்டும் காங்கிரசுக்குத் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.
10 சீட்கள் இருந்தாலும் திமுகவுடன் கூட்டணிக்கு டெல்லி தலைமை தயாராக இருந்தாலும், தங்களுக்கு சீட் கிடைக்காமல்போய்விடுமே என்று அஞ்சும் மாநிலத் தலைவர்கள் இதை ஏற்க மறுத்து வருகின்றனர். இதனால் முதலில் மாநில காங்கிரஸ்தலைவர்களை சமாதானப்படுத்தும் வேலையில் சோனியா காந்தியின் தூதுவரான கமல்நாத் ஈடுபட்டுள்ளார்.
கூடுதலாக இரண்டு சீட்களாவது தர வேண்டும் என்று திமுக தலைமையிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் மீண்டும்தொலைபேசியில் கோரியதாகவும் அதை திமுக ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.
காங்கிரசுக்கு 10 தந்தாலே தங்களுக்கு 15 சீட்கள் மட்டுமே மிஞ்சும் என்று சிங்கிடம் திமுக தெரிவித்துவிட்டது. கூடுதலாககொடுத்தால் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் எங்களால் 13 இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும். இது எங்கள்தொண்டர்களுக்கு வருத்தம் தரும் என திமுக கூறியுள்ளது.
இதனால் நேற்று நடந்திருக்க வேண்டிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இன்று இந்தப் பேச்சுவார்த்தைநடந்தது.
சீட் இழுபறி விவகாரத்துக்கு வாசனின் ஆதரவாளர்கள் தான் காரணம் என திமுக திட்டவட்டமாக நம்புகிறது. திமுகவுடன்வேண்டா வெறுப்பாகவே கூட்டணிக்கு ஒப்புக் கொண்ட வாசன், ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், தங்கபாலு,சோ.பாலகிருஷ்ணன் ஆகியோர் தான் டெல்லி காங்கிரஸ் தலைமையைக் குழப்பி வருவதாக திமுக நினைக்கிறது.
அதிமுக ஆதரவாளர்களான இவர்களது நெருக்குதலுக்கு பணிவதில்லை என்பதில் திமுக திட்டவட்டமாக உள்ளது. இதனால்காங்கிரஸ் தான் இறங்கி வர வேண்டிய நிலையில் உள்ளது.
இன்றைய பேச்சுவார்த்தையில் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிடும் என கருதப்படுகிறது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications