வாஜ்பாயுடன் மேடையேறுகிறார் ஜெயலலிதா
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் நாளை மறுதினம் (பிப்ரவரி 2ம் தேதி) நடைபெறவுள்ள நாற்கர நெடுஞ்சாலைத் திட்ட பூமி பூஜை விழாவில்பிரதமர் வாஜ்பாயுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்று ஒரே மேடை ஏறுகிறார்.
துணைப் பிரதமர் அத்வானி கோஷ்டிக்கு நெருக்கமாக உள்ள ஜெயலலிதா தொடர்ந்து பிரதமர் வாஜ்பாயுடன் மோதலில் இருந்துவருகிறார். வாஜ்பாய் சென்னை வந்தபோது இருமுறை வெளியூர் புறப்பட்டுச் சென்றுவிட்டார் ஜெயலலிதா.
முரசொலி மாறனின் இறுதிச் சடங்குக்கு திடீரென வாஜ்பாய் சென்னை வரும் நிலை ஏற்பட்டபோது தான், விமான நிலையத்தில்அவரை சம்பிராதயமாக வரவேற்றார் ஜெயலலிதா.
இந் நிலையில் நாட்டின் நான்கு மூலைகளையும் இணைக்கும் தங்க நாற்கர நெடுஞ்சாலைத் திட்டத்தின் பூமி பூஜை விழா பிப்ரவரி2ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது. இந்தப் பூமி பூஜையில் வாஜ்பாய் பங்கேற்கிறார்.
பா.ஜ.க- அதிமுக கூட்டணி ஏற்பட்டுவிட்டாலும் வாஜ்பாயுடன் தொடர்ந்து மோதலிலேயே இருந்து வரும் ஜெயலலிதா இந்தநிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்பது சந்தேகமாகவே இருந்து வந்தது.
இந் நிலையில் வாஜ்பாயுடன் ஒரே மேடையில் ஏற ஜெயலலிதா முன் வந்துள்ளார்.
இது குறித்து நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி விழாவில் முதல்வர்ஜெயலலிதாவும் கலந்து கொள்கிறார். அப்போது வாஜ்பாயும், ஜெயலலிதாவும் ஒரே மேடையில் தோன்றுவார்கள்.
இந்த நெடுஞ்சாலைத் திட்டம் ரூ. 30,000 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. வரும் 2007ம் ஆண்டு சாலை அமைக்கும் பணிமுடிவடையும். கன்னியாகுமரி முதல் சென்னை வரையில் உள்ள முக்கிய சாலைகளை ஒருங்கிணைக்கும் புதிய சாலைமேம்பாட்டுத் திட்டமும் தொடங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டம் முழுமை அடையும்போது தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் 12 மணி நேரத்தில் சென்னையை சென்றடையமுடியும். இதனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்றார்.
பிரதமர் வாஜ்பாயுடன் கன்னியாகுமரியில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பார் என தமிழக அரசின் செய்திக்குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி நிகழ்ச்சியில் பிரதமர் வாஜ்பாயும் முதல்வர் ஜெயலலிதாவும் ஒன்றாகக் கலந்து கொண்டாலும் இருவரும் தனியேசந்தித்துப் பேச்சு நடத்துவார்களா என்று தெரியவில்லை.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!











Click it and Unblock the Notifications