திமுகவை "மறக்காத" அத்வானி!!
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய துணைப் பிரதமர் அத்வானிசெய்தியாளர்களிடம் பேசும்போது, வாய் தவறுதலாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாககுறிப்பிட்டார்.
சென்னை வந்த அத்வானிக்கு முதல்வர் ஜெயலலிதா தனது வீட்டில் நேற்று இரவு விருந்து அளித்தார். அப்போதுஅதிமுக, பா.ஜ.க. கூட்டணி குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
பின்னர் வெளியே வந்த அத்வானி செய்தியாளர்களிடம் பேசுகையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக மாநிலதிமுகவுடன் பா.ஜ.க. தேர்தல் குழுவினர் பேசிக் கொண்டிருப்பதாக வாய் தவறுதலாக தெரிவித்தார். பின்னர்அருகில் இருந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அதிமுக என்று எடுத்துக் கொடுத்தவுடன், சுதாரித்துக்கொண்டு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறினார் அத்வானி.
நீண்ட காலமாக திமுகவுடன் உறவு வைத்துக் கொண்டு திடீரென்று பிரிந்ததால் அத்வானியால் இன்னும் திமுகவைமறக்க முடியவில்லை போலும்!!












Click it and Unblock the Notifications