மெக்கா கூட்ட நெரிசலில் 11 இந்தியர் உட்பட 260 பேர் பலி-- ஏ.ஆர்.ரஹ்மான் பத்திரம்
மெக்கா:
மெக்காவில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 260 பேர் உயிரிழந்தனர்.இதில் 11 இந்தியர்களும் அடங்குவர்.
நேற்று மெக்காவில் சாத்தானின் மீது கல் எறியும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஜம்ரத் பாலம் அருகே ஏற்பட்டகூட்ட நெரிசலில் 244 பேர் உயிரிழந்தனர். மேலும் 244 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கைமேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதில் இந்தியர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை இந்திய ஹஜ் குழுத் தலைவர் சையது அக்பரூத்தின்உறுதிப்படுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் (வயது 70), கேரளாவைச் சேர்ந்த மொஹம்மத் அலி (வயது40), காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மொஹம்மத் அப்துல்லா மீர் (வயது 40) ஆகியோர் சம்பவ இடத்தில்இறந்துள்ளனர்.
மேலும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மொஹம்மத் முகைதீன் என்பவர் நெரிசலில் சிக்கி, மீண்ட பின்மாரடைப்பினால் இறந்துள்ளார். மற்ற 7 பேர் குறித்த விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக இருப்பதாக தமிழ்நாடுஇஸ்லாமிய மக்கள் இயக்கத் தலைவர் காயல் இளவரசு மெக்காவிலிருந்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications