சென்னை வந்தார் ஸ்ரீரங்கம் மணப்பெண் ஜெயஸ்ரீ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சி ஸ்ரீரங்கம் கல்யாண மண்டப தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய மணமகள் ஜெயஸ்ரீ மன நிம்மதிக்காகசென்னையில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்துவிட்டார்.
ஸ்ரீரங்கம் பத்மபிரியா கல்யாண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் மணமகன் குருராஜன் உள்ளிட்ட 61 பேர்பரிதாபமாக இறந்தனர். மணமகள் ஜெயஸ்ரீ காயமின்றி தப்பினாலும் கடும் மன அதிர்ச்சிக்குள்ளாகி சிகிச்சைபெற்று வந்தார்.
சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அவரைக் காண அடிக்கடி உறவினர்களும், நண்பர்களும், அந்த ஊர்க்காரர்களும்வந்தவாறு இருந்ததால் மன அமைதி பாதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து சென்னையில் உள்ள தனது சகோதரி லதாவின் வீட்டிற்கு வந்துள்ளார் ஜெயஸ்ரீ.
அவரை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications