பாண்டிச்சேரியில் ஹாலந்து இளைஞர் படுகொலை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள புகழ்பெற்ற ஆரோவில் பகுதியில் ஹாலந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
பாண்டிச்சேரி அருகே உள்ள ஆரோவில்லில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தவர் சிட்ஸ் டொவ் வான் லூ.ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவர். 2 நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் இருந்த ரூ. 1 லட்சம் பணம், கம்ப்யூட்டர்ஆகியவை திருடு போயிருந்தன.
இந் நிலையில் நேற்று இவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள்காணப்பட்டன. ஆரோவில் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
ஆரோவில்லில் உள்ள ஆஸ்ரமத்தில் பல வெளிநாட்டினர், குறிப்பாக பிரஞ்சு நாட்டினர் பெருமளவில் வசித்துவருகிறார்கள். ஆனால் இதுவரை இதுபோன்ற படுகொலைச் சம்பவம் நடந்ததில்லை. ஹாலந்து இளைஞர்படுகொலையைத் தொடர்ந்து ஆரோவில்லின் மைத் மந்திர் 3 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications