சென்னையில் சீட்டு மோசடி: ரூ.1 கோடியை இழந்த பொது மக்கள்
சென்னை:
சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி அளவுக்கு மோசடி செய்த பலசரக்குக் கடை வியாபாரிகள் திடீர்மாயமாகி விட்டனர்.
அயனாவரம் பகுதியில் பிரபலமான ஒரு பலசரக்குக் கடை உள்ளது. இந்தக் கடையை அண்ணன், தம்பிகள் 4 பேர்நடத்தி வந்தனர். கடை வியாபாரத்தோடு, அதிக வட்டி தருவதாகக் கூறி ஏலச்சீட்டும் நடத்தியுள்ளனர். முதல்வருடத்தில் ஏலம் எடுத்தவர்களுக்கு உரிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவே, மேலும் பலர் ஏலச்சீட்டில்சேர்ந்துள்ளனர்.
ரூ.10,000, ரூ.50,000, ரூ.1 லட்சம் என பல பிரிவுகளில் ஏராளமானோர் தங்களது பணத்தைக் கட்டியுள்ளனர்.கடந்த 6 மாத காலமாக ஏலம் எடுத்தவர்களுக்கு உரிய பணத்தை சரியாகத் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.
இதனால் பணம் கட்டியவர்கள் கடைக்குச் சென்றபோது, கடை பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். அதன்பின் ஆண்களும், பெண்களும் சுமார் 150 பேர் கமிஷ்னர்அலுவலகம் சென்று மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர்.
இந் நிலையில், ஏலச்சீட்டு நடத்தியவர்கள் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, ஏராளமானோர்அங்கு சென்றனர். அங்கு பதுங்கியிருந்தவர்களிடம் சென்று பணம் கேட்டபோது, நாய்களை அவிழ்த்து விட்டு,விரட்டினார்களாம். போலீஸாரிடம் இது குறித்தும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications