நாளை ஜெ. ஆண்டிப்பட்டி பயணம்: தேர்தல் ஸ்பெஷல் நலத் திட்டங்களை துவக்கி வைக்கிறார்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா நாளை தனது தொகுதியான ஆண்டிப்பட்டி செல்கிறார். தேர்தலையொட்டி ஆண்டிப்பட்டிஉள்ளிட்ட தேனி மாவட்டத்துக்கு பல நலத் திட்டங்களை அறிவிக்கவுள்ளார்.
மதுரை வரை சிறப்பு விமானத்தில் செல்லும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கண்டமனூர் செல்கிறார்.அங்கிருந்து கார் மூலம் தேனி ராஜேந்திரா நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் ரூ. 127 கோடியளவுக்கு நலத்திட்டங்களை அறிவிக்கவுள்ளார்.
இந் நிகழ்ச்சியில் பெரியகுளம் எம்.எல்.ஏவான பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொள்கிறார்.
கம்பத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா, 5 தலித் விடுதிகள் திறப்பு, கள்ளர் சமூகத்தினருக்குஆசிரியர் பயிற்சி பள்ளி, சாலைகள் அமைப்பு, கண்மாய் அமைப்பு, தேனி, உத்தமபாளையம், தெப்பம்பட்டியில் 3மகளிர் காவல் நியைங்கள், தாசில்தார் அலுவலக குடியிருப்புகள், துணை மின் நிலையம், மண்ணெண்ணெய்விற்பனை மையம், அவசர சிகிச்சை மையம், கூட்டுறவு வங்கி திறப்பு விழா என தேனி மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளுக்கும் ஏகப்பட்ட திட்டங்களை துவக்கி வைக்கவுள்ளார் ஜெயலலிதா.
மேலும் உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் கோலில் அன்னதான மண்டபம், மரத் தேர் அமைக்கும்பணிகளையும் துவக்கி வைக்கிறார். சுமார் 375 திட்டங்களை நாளை துவக்கி வைக்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி தேனி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications