கலகி பகவானின் ரூ 300 கோடி சொத்து தொடர்பான வழக்கு தள்ளுபடி
டெல்லி:
ரூ. 300 கோடிக்கும் அதிகமாக சொத்து குவித்ததாக கல்கி பகவான் மீது தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம்தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த கல்கி பகவான் முதலில் எல்.ஐ.சியில் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். பின்னர்சென்னையையடுத்த நேமம் என்ற இடத்தில் ஆஸ்ரமம் தொடங்கினார். பின்னர் ஆந்திர மாநிலத்தில் தனதுகிளைகளை நிறுவினார். மிகக் குறுகிய காலத்தில் மிகப் பிரபலமானார்.
இவருடன் எல்.ஐ.சியில் பணியாற்றிய விஸ்வநாதசாமி என்பவர் கல்கி பகவான் மீது அடுக்கடுக்காய் குற்றங்களைச்சுமத்தினார். மிகச் சாதாரண வாழ்க்கை நடத்தி வந்த கல்கி பகவான், ஆன்மீகத்தைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில்பணம் குவித்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
கல்கி பகவானுடன் சில காலம் ஆஸ்ரமத்தில் இருந்த விஸ்வநாதசாமி பின்னர் அவரை விட்டுப் பிரிந்துவிட்டார்.
இதையடுத்து உயர் நீதிமன்றத்திலும் கல்கி பகவான் மீது ஒரு வழக்கைத் தொடர்ந்தார். அதில், கல்கி பகவானிடம் ரூ.300 கோடிக்கு சொத்து உள்ளது. இதற்கு வரி செலுத்தப்பட்டவில்லை. இது தொடர்பாக வருமான வரித்துறைமற்றும் சிபிஐ, தமிழக போலீசாருக்கு தகவல் தந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வருமான வரி விவகாரத்தில் இருந்து தப்ப, இந்தச் சொத்துக்களை தனது மகன், உறவினர்களுக்கு கல்கி பகவான்பிரித்துக் கொடுத்துள்ளார். எனவே, கல்கி பகவானின் சொத்துக்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார் விஸ்வநாதசாமி.
இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் விஸ்வநாதசாமி மேல்முறையீடுசெய்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் ருமாபால், வெங்கடராம ரெட்டி ஆகியோர், விஸ்வநாதசாமியின் மனுவை தள்ளுபடிசெய்துவிட்டனர்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications