வைகோவுடன் கருணாநிதி திடீர் சந்திப்பு
சென்னை:
பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை திமுக தலைவர் கருணாநிதி இன்றுதிடீரென சந்தித்துப் பேசினார்.
பொடா வழக்கு, ஜாமீன் விசாரணை தொடர்பாக நீதிமன்றத்திற்கு இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகொண்டு வரப்பட்டார். இந் நிலையில் திடீரென திமுக தலைவர் கருணாநிதி அங்கு வந்தார். இதனால் நீதிமன்றவளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வைகோவுடன் கருணாநிதி சுமார் அரை மணி நேரம் தனியே பேசிக் கொண்டிருந்தார். அதை உளவுப் பிரிவுபோலீசார் எட்ட நின்று ஒட்டு கேட்டனர். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, பொடாநீதிமன்றம் பிறப்பித்த கடுமையான நிபந்தனைகளை மனதில் கொள்ளாமல் ஜாமீனில் வெளியே வருமாறுவைகோவிடம் கேட்டுக் கொண்டேன் என்றார்.
எத்தகைய நிபந்தனைகள் இருந்தாலும் பரவாயில்லை, உடல் நிலையைக் கருத்தில் கொண்டாவது வைகோகட்டாயம் ஜாமீனில் வெளியே வர வேண்டும் என கருணாநிதி கூறியதாகத் தெரிகிறது.
இச் சந்திப்பு பிற்பகலில் நடந்தது. மாலையில் நிபந்தனைகளைத் தளர்த்தி உயர் நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி கட்சியினருக்கு கருணாநிதி விருந்து:
இதற்கிடேயே ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சித் தலைவர்களுக்கு கருணாநிதிவரும் 6ம் தேதி (வெள்ளிக்கிழமை) விருந்து அளிக்கிறார்.
ஜாதி மோதல் வேண்டாம்:
முன்னதாக சென்னையில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, இது ஒருவன்னிய இல்லத் திருமண விழா. ஆனால் இந்த திருமணத்தை தலித் சமுதயாத்தைச் சேர்ந்த அசோகன்எம்.எல்.ஏவும் செம்பனார் கோவில் மதிவாணனும் முன்நின்று நடத்துகிறார்கள்.
வன்னியர் இல்லத் திருமணத்தை நடத்துவது இரு தலித் சகோதரர்கள். இதிலிருந்தாவது இரு சமுதாயத்தினரையும்பிரித்து ஆதாயம் தேட வேண்டும் என்று நினைப்பவர்கள் திருந்துவார்கள் என நம்புகிறேன்.
தாழ்த்தப்பட்டவர்களுக்காக திமுக அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. இனியும் பாடுபடும்.நானே என் மகன் அழகிரிக்கு தலித் குடும்பத்தில் பெண் எடுத்தவன் தான் என்றார்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications