For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிப். 9ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் உதயம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பிப்ரவரி 9ம் தேதி முதல் புதிய கிருஷ்ணகிரி மாவட்டம் செயல்படத் தொடங்கும் என்று தமிழக சட்டசபையில்ஆளுநர் ராம்மோகன் ராவ் தெரிவித்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஆளுநர் உரை தமிழில்வாசிக்கப்படவில்லை.

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் ராம்மோகன் ராவ் உரையுடன் தொடங்கியது. எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பையடுத்து ராம்மோகன் ராவ் தனது உரையை (அரசின் உரை) வாசிக்கத் தொடங்கினார்.அந்த உரையில் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் விவரம்:

* வட கிழக்குப் பருவ மழையும், தென் மேற்குப் பருவ மழையும் பொய்த்துவிட்டதால் தமிழகம் கடும் வறட்சியில்சிக்கித் தவிக்கிறது. இதனால் வறட்சி நிவாரண நிதியாக ரூ. 1,584 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்கவேண்டும்.

மேலும் 10.8 லட்சம் டன் அரிசியையும் தமிழகத்துக்கு வழங்கி உதவ வேண்டும்.

*பிப்ரவரி 9ம் தேதி, திங்கள்கிழமை முதல், தர்மபுரி மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டிருக்கும் புதியகிருஷ்ணகிரி மாவட்டம் செயல்படத் தொடங்கும்.

* காவிரியில் கடந்த ஜனவரி மாதம் வரை கர்நாடக அரசு 60.54 டிஎம்சி தண்ணீரை மட்டுமே விடுவித்துள்ளது.மீதமுள்ள தண்ணீரையும் கர்நாடகத்திடமிருந்து பெற உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்.

யாருடைய உத்தரவுக்கும் கீழ்படியாமல் கர்நாடக அரசு நடந்து கொள்வது ஆரோக்கியமான முன்னுதாரணம்அல்ல. காவிரியில் தனக்குள்ள பங்கைப் பெறாமல் தமிழகம் ஓயாது.

*சென்னை நகரில் நிலவும் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்க மத்திய அரசிடம் ரூ. 700 கோடி கோரப்பட்டுள்ளது.கடல்நீரை குடிநீராக மாற்றுவது ஒன்று தான் இந்தப் பிரச்சனையைப் போக்க ஒரே வழி என அரசு கருதுகிறது.

* 300 கி.மீ. தொலையில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டு வரும் ரூ. 730 கோடிமதிப்பிலான புதிய வீராணம் திட்டம் இந்த ஆண்டு மே மாதம் நிறைவடையும்.

* மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளை வருகிற ஏப்ரல் மாதம் 13ம் தேதி தொடங்கிவைக்கப்படும்.

* தமிழகம் முழுவதிலும் உள்ள 2,500 பழைய அரசுப் பேருந்துகள் அகற்றப்பட்டு, 2 கட்டமாக புதிய பேருந்துகள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ. 30 கோடி மதிப்பில் பழுதடைந்த 6,000 அரசுப் பேருந்துகள் சீர் செய்யப்படும்.

* இந்த நிதியாண்டில் மாநிலம் முழுவதிலும் 188 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் திறக்கப்படும்.

* கிராமப்புற ஊராட்சிகளில் ரூ. 268 கோடி மதிப்பில் 12,518 துப்புறவு வளாகங்கள் அமைக்கப்படும்.

* மாநில, தேசிய, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.2.10 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 1,200 குழந்தைகள் காப்பாற்றப்பட்டு, மீட்கப்பட்டுவளர்க்கப்பட்டு வருகின்றன.

* சென்னை தரமணி எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் அதி நவீன முறையில் மாநில காவல்துறை தலைவர் (டிஜிபி)அலுவலகம் கட்டப்படும்.

*தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 7,000 கோடியைத் தாண்டியுள்ளது. இதை மேலும் அதிகரிக்க சிங்கப்பூரின்உதவியுடன் சென்னையில் 15 லட்சம் சதுர அடியில் இரண்டாவது தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.ஐ.டி. சார்ந்த தொழில் நகரம் ஒன்றும் சோளிங்கநல்லூரில் அமைக்கப்படும்.

*தமிழகத்துக்கு அடுத்த ஆண்டுக்கு ரூ. 8,001 கோடி (கூட்டுத் தொகை ஜெயலலிதாவின் ராசி எண்ணான 9!!)ஒதுக்குமாறு திட்டக் கமிஷனிடம் கோரப்படும்.

*கந்து வட்டி கும்பலைக் கட்டுப்படுத்தி, ஏழைகளைச் சுரண்டி வந்த லாட்டரிச் சீட்டுகளுக்குத் தடை விதித்தது இந்தஅரசின் பெரும் சாதனை.

*ரூ. 104 கோடி செலவில் விரிவாக்கப்பட்டு வரும் சென்னை அரசு பொது மருத்துவமனை விரைவில்திறக்கப்படும்.

*தூத்துக்குடியில் டைட்டாடினியம் டை ஆக்ஸைட் தொழிற்சாலை தொடங்க டாடா நிறுவனத்துடன் தமிழக அரசுஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

* மதுக் கடைகளை அரசே நடத்துவதன் மூலம் 36,000 பேருக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளனஎன்பது உள்ளிட்ட அரசின் பல்வேறு சாதனைகளை, புதிய அறிவிப்புகளைப் பட்டியலிட்டார் ஆளுநர்ராம்மோகன் ராவ்.

ஆளுநர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை தமிழில் படித்ததாகக் கூறி சபைக் குறிப்பில் பதிவு செய்வதாகசபாநாயகர் காளிமுத்து பின்னர் அறிவித்தார். இதனால் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழில்ஆளுநர் உரை வாசிக்கப்படவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X