விவசாயி தற்கொலைக்கு காரணம் வறட்சி அல்ல.. கள்ளக் காதல் தான்- சொல்கிறார் பொன்னையன்
சென்னை:
தஞ்சையில் விவசாயி வறட்சியால் தற்கொலை செய்து கொண்டதாக திமுக கூறிய குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர்பொன்னையன், அவர் கள்ளக் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக புதுத் தகவலைத்தெரிவித்தார்.
சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி பேசுகையில்,தொடர்ந்து 2வது ஆண்டாக ஆளுநர் உரையின் தமிழாக்கம் படிக்கப்படவில்லை. தமிழ் தொடர்ந்துபுறக்கணிக்கப்படுகிறது.
அதேபோல காவிரிப் பிரச்சினையிலும் இந்த அரசு தொடர்ந்து தவறு செய்து வருகிறது. திமுக ஆட்சிக் காலத்தில்ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதிக்குள் காவிரிப் பாசனப்பகுதி விவசாயத்திற்காக மேட்டூர் அணை திறந்துவிடப்படும். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இது நடக்கவே இல்லை.
இதையெல்லாம் சமாளித்து, பம்ப்செட் வைத்து விவசாயம் செய்து விளைவித்த நெல்லை விற்கலாம் என்றால்நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைக் கூட அரசு திறக்கவில்லை. தஞ்சையில் தமிழ்வளவன் என்ற விவசாயிதனது நிலத்தில் அரிசி பயிரிட்டார். தண்ணீர் இல்லாமல் அது கருகியதால் உளுந்து பயிரிட்டார். அதற்கும் தண்ணீர்விட முடியாமல் காய்ந்து போனது. இதனால் அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்றார்புகழேந்தி.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பொன்னையன், அந்த விவசாயியின் சாவு குறித்து போலீசார் விசாரித்தனர்.அவரது நிலம் செழிப்பாகவே உள்ளது. அவர் கள்ளக் காதல் காரணமாகத் தான் தற்கொலை செய்து கொண்டார்என்றார்.
பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பழனிச்சாமி பேசுகையில், விளைவித்த நெல்லை வாங்க அரசு முன் வராதகாரணத்தால்தான் பல இடங்களில் குறைந்தபட்ச விலை கூட கிடைக்காமல், நெல்லை கடலில் கொட்டியுள்ளனர்விவசாயிகள். திறந்துள்ள சில நெல் கொள்முதல் நிலையங்களிலும் பலவித கட்டுப்பாடுகளை விதிப்பதால்விவசாயிகள் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர் என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பொன்னையன், கடலில் கொட்டும் அளவுக்கு உழவர்கள் பணக்காரர்கள் அல்ல.அரசியல் கட்சிகளின் தூண்டுதால் கொட்டியிருக்கலாம் என்றார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications