அந்த போலிப் பெரிய மனிதர்கள்: கருணாநிதி பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா போலிப் பெரிய மனிதர்கள் என்று கூறியிருப்பது பிரதமர் வாஜ்பாயையும் துணைப் பிரதமர்அத்வானியையும் தான் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக முரசொலியில் அவர் கூறியிருப்பதாவது:

வழக்குகளில் கைதாவோரின் போலீஸ் காவலை 15 நாட்களிலிருந்து 30 நாட்களாக அதிகரிப்பது தொடர்பாகதமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை திருத்த மசோதா குறித்து ஆளுநர் யோசித்துப் பார்த்திருக்கவேண்டும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை.

அவர் செய்யத் தவறியதை, குடியரசுத் தலைவர் செய்தது ஆறுதலையும், சந்தோஷத்தையும் அளிக்கிறது.

வேலை நிறுத்தம் செய்து பதவியிழந்த 999 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆளுநர் உரையில் விமோச்சனம்கிடைக்கவில்லை. அரசை துதி பாடும் வாசகங்கைளத் தவிர வேறு அறிவிப்புகளை வெளியிட இந்த ஆட்சியில்ஆளுநருக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை.

ஆண்டிப்பட்டி விழாவில் போலி பெரிய மனிதர்கள் குறித்து ஜெயலலிதா கூறியுள்ளார். இன்னும் அத்வானி,வாஜ்பாய் மீது அவருக்க ஆத்திரம் தீரவில்லை போலும். அதனால்தான் கூட்டணியில் சேர்த்துக் கொண்டபின்னரும் கூட, அவர்களை சுட்டிக் காட்டி ஜாடை பேசுகிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+